இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே?

இறுதி யுத்தத்தின்போது பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை கூற முடியாத காணாமல் போனோர் அலுவலகத்திற்கு (OMP) யாழ்ப்பாணத்தில் சர்வதேச காணாமல் போனோர் தினத்தைக் கொண்டாடுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) அன்று இடம்பெற்ற சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மாநாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு கேள்வியெழுப்பினர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:

“இறுதி யுத்தம் இடம்பெற்று 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், 29 சிறுவர்கள் உட்பட 100 பேர் வரை இலங்கை இராணுவத்திடம் அவர்களின் உறவினர்களால் உயிருடன் கையளிக்கப்பட்டனர். ஆனால், இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தேடிக்கண்டறிய முடியாத ஓ.எம்.பி (OMP), சர்வதேச காணாமல் போனோர் தினத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவது இலங்கை அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் காயப்படுத்தும் ஒரு செயலாகும்.

இலங்கையில் தமிழர்கள் காணாமலாக்கப்படுதல் என்பது மிகச் சாதாரண விடயமாக மாறிவிட்டது. வயது, பால் வேறுபாடின்றி காலத்துக்குக் காலம் இவர்கள் கடத்தப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் உள்ளனர். அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் அதிகமான ஆண்களும், அதற்கு அடுத்த நிலையில் பெண்களும் இருக்கின்றனர். இதில் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படும் விவரமறியாத பிள்ளைகளும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அதையும் தாண்டி குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையைத் தவிர உலகில் எங்குமே நடைபெற்றிருக்காத ஒரு விடயமாக வடக்கு, கிழக்குத் தமிழர் பகுதிகளில் இடம்பெற்றிருக்கிறது.

இதுவரை பல குழந்தைகள் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும், அவர்களால் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இதற்கான நேரடிச் சாட்சிகள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த வேளையில், அதிகமான குழந்தைகள் தம் பெற்றாருடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பெற்றாருடன் அழைத்துச் செல்லப்பட்ட சிறார்கள் மீளத் திரும்பவில்லை.

இந்த விடயம் காணாமல் போனோர் அலுவலகத்தின் விசாரணை அமர்வுகளில் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்தச் சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இன்று வரை கூற முடியாத நிலையிலேயே இந்த அலுவலகம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கையில் காலத்துக்குக் காலம் மாறிவரும் அரசாங்கங்கள் இந்த விவகாரம் தொடர்பில் பேச மறுத்து வருகின்ற நிலையில், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் தொடர்பான விடயங்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஐ.நா. சபைக்குப் பட்டியலிட்டு அனுப்பியுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், காணாமல் போனோர் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்தில் சர்வதேச காணாமல் போனோர் தினத்தைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இந்த அலுவலகம் உண்மையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அலுவலகம் அல்ல; இது சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் எனப் பாதிக்கப்பட்ட உறவுகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தில் இதுவரை 23 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 9,819 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுபெற்றதாக அலுவலகத்தின் தலைவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், பல முறைப்பாடுகளில் இலங்கை இராணுவத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்கள் தொடர்பில் அலுவலகத்திடம் எந்தப் பதிலும் இல்லை.

இதுவரை முறைப்பாடு கிடைக்கப்பெற்றவர்களில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினரிடம் இருந்து எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். அப்படியானால், இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஏன் பதில் இல்லை? இவ்வாறான ஒரு நிலையில், இந்த மாநாட்டைத் தமிழர் பகுதிகளில் காணாமல் போனோர் அலுவலகம் நடத்துவது மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே பார்க்கிறோம்” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

HPgenfsb0AEZu1o

“கடந்த 6 ஆண்டுகளில் தி.மு.க.வில் நடந்ததைச் சொல்லட்டுமா?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ ராஜாவின்

1200-675-27496391-thumbnail-16x9-cmvijay

சட்டப்பேரவை மரபை மாற்றிய முதலமைச்சர் விஜய்: சக அமைச்சர்களுடன் அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்த சுவாரஸ்யம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் அமராமல், சக அமைச்சர்களுடன்

1200-675-27498226-thumbnail-16x9-pinhole

உலகின் முதல் நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

August 27, 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (Pinhole Pupilloplasty –

photo-collage.png

செம்மணி மனிதப் புதைகுழி; ஐ.நா விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர்

August 27, 2026

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள்

rum

ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு மீண்டும் முதலிடம்

August 27, 2026

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக்

parliment

22ஆவது திருத்தம்: NPP எம்.பியும் மனுத்தாக்கல்

August 27, 2026

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி உயர்

court-judge-hammer-gavel-696x398

விபத்தில் ஏழு பேர் பலி: சாரதிக்கு 13 வருட கடூழியச் சிறை உறுதி

August 27, 2026

2017ஆம் ஆண்டு சிலாபம் பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்து ஒன்றில் 7 பேர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த தனியார் பேருந்து

anu

இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு நாட்டில் இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

August 27, 2026

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

29

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே?

August 27, 2026

இறுதி யுத்தத்தின்போது பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை கூற முடியாத

images

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான், கருணா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளுடன் அசாத் மௌலானா தொடர்பிலிருந்தார் – தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டம்

August 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா

WhatsApp Image 2026-08-27 at 21.05.58

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை உள்ளிருந்தே அவதானித்த நீதி அமைச்சர்!

August 27, 2026

ழ். மாவட்ட செயலகத்திற்கு வெளியே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தொடர்பில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

image-3

“தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் பிராட்போர்ட்டை விட சவ் மிதமான முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்கிறார்: புதிய கருத்துக்கணிப்பு”

August 27, 2026

தேர்தல் நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கவுன்சிலர் பிராட் பிராட்போர்ட்டை (Brad Bradford) விட மேயர் ஒலிவியா