கெப்பித்திகொல்லாவை – மெதவச்சி முக்கிய வீதியில் கோனமரியாவை பகுதியில், வியாழக்கிழமை (27) அன்று காலை ஜீப் வண்டியும் முச்சக்கர வண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாகக் கெப்பித்திகொல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இடம்பெற்ற இச்சம்பவத்தில் பதவியைப் பகுதியைச் சேர்ந்த பாட்டி, அவரது மகள் மற்றும் பத்துப் நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குழந்தைக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்தத் துயர விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.