தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில் உள்ள வீடொன்றில், று புதன்கிழமை காலை 9:30 மணியளவில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தார். அவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயான கோகுலன் சோனியா (வயது 28) எனத் தெரியவந்துள்ளது.
தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த இளம் குடும்பப் பெண், உடனடியாகத் தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
தாக்குதலை மேற்கொண்ட, உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் 32 வயதுடைய கணவர், தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில் வைத்துத் தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குறித்த பெண்ணுக்கு 7 மற்றும் 10 வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கணவன் மனைவிக்கு சிறிது காலம் பிரிந்திருந்த நிலையில், அவர்கள் மீண்டும் அண்மையில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபரிடம் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.