யாழ் மாவட்ட செயலக பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் மீதான பலப்பிரயோகத்துக்கு தமிழ்த்தலைமைகள் கண்டனம்!

தமக்கு நீதிவேண்டிப் யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தாய்மார் பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையையும், அவற்றை உள்ளே இருந்தவாறு கையடக்கத்தொலைபேசி ஊடாகப் பார்த்துக்கொண்டிருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் செயலையும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் செவ்வாய்க்கிழமை (25) யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் பொலிஸாரினால் இழுத்துச்செல்லப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு வெளியே தள்ளிவிடப்பட்டனர்.

அதுமாத்திரமன்றி பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட இந்தப் போராட்டக் காணொளியை நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மாவட்ட செயலகத்துக்குள் இருந்தவாறு அவரது கையடக்கத்தொலைபேசியில் பார்வையிடும் புகைப்படமொன்றும் பேஸ்புக்கில் பரவலாகப் பகிரப்பட்டு பலரதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து கடும் கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தாய்மார் நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி, ‘இந்தச் சம்பவங்களை மாவட்ட செயலகத்துக்குள் இருந்து தனது கையடக்கத்தொலைபேசி ஊடாகப் பார்த்துக்கொண்டிருந்த நீதியமைச்சர் எனக் கூறப்படுபவரின் செயலையும், இவற்றை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்களை பகிரங்கமாக தாக்கிப்பேசிய அமைச்சர் சந்திரசேகரனின் செயலையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்’ என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களைப் போலவே செயற்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகக் கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கை இழந்திருப்பதாகவும், சுயாதீன சர்வதேச நீதிப்பொறிமுறையே அவர்களது கோரிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இப்போராட்டம் குறித்துக் கருத்துரைத்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், ‘வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் பல வருடங்களாக இடம்பெற்று வருகிறது. ஆனாலும் இந்தப் போராட்டம் ஏன் அந்த உறவுகளின் போராட்டமாக மட்டுமே இன்னமும் இருக்கிறது? தன் ஒற்றை உறவைத் தேடி அலையும் இந்த அம்மா இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையையே கோரி நிற்கிறார்.

இந்தப் போராட்டத்தினை இந்த அம்மாவுடன் நாங்கள் எங்கள் வசதிக்காக மட்டுப்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும் அறம் சார்ந்து நிற்கும் இந்த அம்மாவின் போராட்டம் எம் இனத்தின் விடுதலைக்கானது என்பதை உணர மறுக்கிறோம். இந்த அம்மா எங்களுக்காகவுமே போராடுகிறார். சிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரசினால் எங்களது இன்னுமொரு உறவு காணாமலாக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே உரத்துக் குரல் கொடுக்கிறார்.

‘இவர்கள் தெருவில் நின்று போராடுவதனால் தான் எங்கள் இழப்புக்களும் வலிகளும் இன்னமும் உயிர்ப்புடன் உலக அரங்கில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்களின் எண்ணிக்கையில் தங்கியிருப்பது அல்ல போராட்டம். இனமாக ஒன்றிணைவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

kek

நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு

October 14, 2026

யர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட

MediaFile_20261013_115703_992

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

October 14, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக

Toronto-Election-1536x783

அக்டோபர் 26 நகராட்சித் தேர்தலில் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கர்தினால் லியோ அழைப்பு!

October 13, 2026

2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo)

TORONTO ELE1

டொராண்டோ நகராட்சித் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்க சாதனை அளவிலான வாக்காளர்கள்

October 13, 2026

டொராண்டோவின் வரவிருக்கும் 2026 நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆறு நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,20,000-க்கும் மேற்பட்ட