ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனைக் கூறியுள்ளார்.
இந்நிலையில், புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலும் அல்லது படகும் உடனடியாகவும் துல்லியமாகவும் அழிக்கப்படும் என்று ஈரானுக்கு எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீரிணையில் கண்ணிவெடிகள் வைப்பதற்கு எதிரான “பூஜ்ய சகிப்புத்தன்மை”கொள்கை முழு வீச்சில் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.