மதுரை
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்திற்குப் புதிய பேருந்து வசதியைத் தொடங்கி வைத்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், திமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பகிர்ந்துகொண்ட முக்கியக் கருத்துகள்:
30 ஆண்டு காலக் கோரிக்கை நிறைவேற்றம்:
-
“முத்தாங்குளம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் பேருந்து வசதி இல்லாததால் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறிவிட்டன; பெண் பிள்ளைகள் எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பதை நிறுத்திவிட்டனர். மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, தற்போது புதிய பேருந்து வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.”
எம்.எல்.ஏ-க்கள் கார் விவகாரம்:
-
“தேர்தலில் 30, 40 கோடி ரூபாய் செலவு செய்து வெற்றிபெறும் எம்.எல்.ஏ-க்களிடம் 10 கார்கள், 1000 கோடி பணம் இருக்கலாம்; ஆனால் அவர்கள் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை. சொந்த தொகுதிப் பக்கமே போகாத எம்.எல்.ஏ-க்களுக்கு அத்தனை கார் எதற்கு? மக்கள் சேவை செய்ய அரசு ஒரு கார் வழங்குகிறது; அதை வேண்டாம் என்று சொல்வது ஏன்?”
எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலடி:
-
“சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது தேவையில்லாததை அவர்கள் பேசினால், நாங்கள் உரிய பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஊழல் மற்றும் கட்சி நிதி குறித்துப் பேசினால் அவர்களுக்குக் கோபம் வருகிறது. ஊழல் கண்டறியப்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.”
தொகுதி மறுவரையறை மற்றும் கூட்டணி:
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக வாக்களிக்குமா என்பது குறித்து இதுவரை அக்கட்சியிடமிருந்து ஒத்த வார்த்தை கூட வரவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் எம்.பி-க்கள் உள்ள கட்சிகளை மட்டுமே சேர்ப்பார்கள்; எங்களுக்கும் எம்.பி-க்கள் வந்தவுடன் அதில் இணைந்து செயல்படுவோம்.”
#CTRNirmalKumar #MaduraiNews #TVKGovernment #DMKMLAs #MLACarScheme #Thiruparankundram #TNAssembly #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates