சென்னை
தமிழக சட்டப்பேரவையில் திமுக – தவெக இடையே ஊழல் கோப்புகள் மற்றும் அவைக்குறிப்பு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலினின் சவால்:
“முதல்வர் தனது டேபிளில் உள்ள ஃபைலைத் திறந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது. மேலும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகள் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியாவதால், அதை நீக்குவதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது,” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி:
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “ஜோசியம் என்று பேசுகிறார்கள்; ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும். எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அப்போது சரியான நேரத்தில் எடுப்போம்,” என்று காரசாரமாகத் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்:
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “முழுமையான நேரலை தவெக ஆட்சியில்தான் வழங்கப்படுகிறது. கோப்புகளைத் திறப்பதில் முதலமைச்சருக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை; ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்வர் விஜய் வெளியிடுவார். எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
சபாநாயகரின் எச்சரிக்கை:
சட்டசபையில் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகளை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#ChiefMinisterVijay #TVKGovernment #UdhayanidhiStalin #MinisterRajmohan #TNAssembly #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates