வளம் தரும் வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் என்பது ஆடி மாதம் (அல்லது சிரவண மாதம்) பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் சுமங்கலிப் பெண்களால் குடும்ப நலனுக்காகவும், செல்வ வளம் பெருகவும் கடைபிடிக்கப்படும் மிக முக்கியமான நோன்பாகும்.

வரலட்சுமி விரதம் என்பது சுமங்கலிப் பெண்கள் செய்யும் மிகச் சிறப்பான பூஜையாகும். மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.

தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோக மாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்கசுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள். லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும்.

ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் 3வது ஆடி வெள்ளியன்றோ அல்லது 4வது ஆடி வெள்ளி அன்றோவரும். சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

வரலட்சுமி விரதம் விரதம் அனுட்டிப்பதற்கு வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.

1. சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.
சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.

புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். நாளை பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும் வரலாம்.மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.

2. பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.

தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக.

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக

6fe740e3-d63a-4122-8ada-4e8754dc10ee

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் “Peace Summit & Conference 2026”

October 9, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் “Peace Summit & Conference 2026” சர்வதேச மாநாடு

gs

கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்பு; 1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

October 9, 2026

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி,