இலங்கை பல்கலைக்கழக மாணவர்களில் 70% – 80%; போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்?

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான பெரும்பான்மையினர் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே என்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது தொடர்பான முழு நாடும் ஒன்றாக தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பேராசிரியர் இதனைக் குறிப்பிட்டார்.

நபர்கள் தொடர்ந்து போதைப்பொருளை நாடிச் செல்வது அதிலிருந்து கிடைக்கும் ஏதேனுமொரு மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அல்ல, மாறாக போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தும் போது ஏற்படும் திரும்பப் பெறல் அறிகுறிகளை (withdrawal symptoms) கட்டுப்படுத்துவதற்காகவே ஆகும் என பேராசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

தொடர்ச்சியாக போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் உடலுக்குள் ஏற்படும் இந்தத் திரும்பப் பெறல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் தேவை காரணமாகவே மாணவர்கள் உட்பட எந்தவொரு நபரும் தொடர்ந்து போதைப்பொருட்களைப் பயன்படுத்த தூண்டப்படுகிறார்கள் என்றும் அமில இசுரு மேலும் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குவதற்கு கடத்தல்காரர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பேராசிரியர் இதன்போது கூறினார்.

மேலும், பாடசாலை அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழக அமைப்பினுள்ளும் பிள்ளைகள் போதைப்பொருளுக்குப் பழக்கப்படும் மற்றும் அடிமையாகும் அதிக போக்கு காணப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பேராசிரியர் அமில அவர்கள்:

“எந்தவொரு நபரும் தொடர்ச்சியாக போதைப்பொருளைப் பயன்படுத்துவது போதைப்பொருளிலிருந்து கிடைக்கும் என்பதாக அவர்கள் கூறும் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அல்ல. போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தும் போது ஏற்படும் திரும்பப் பெறல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே அவர்கள் தொடர்ந்து போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது நமது பல்கலைக்கழகத்தில் தமது பாடநெறியைத் தொடர முடியாமல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களை எடுத்துக்கொண்டால், ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையானவர்களுக்கு அந்த நிலைமை ஏற்படுவதற்குக் காரணம் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானமையே ஆகும்.

இலங்கையில் தற்போது நமது பிள்ளைகளை போதைப்பொருளுக்கு அடிமையாக்க இந்த போதைப்பொருள் வியாபாரிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் பிள்ளைகள் போதைப்பொருளுக்குப் பழக்கப்படுவதில் ஒருவித போக்கு காணப்படுவதைக் காட்டுகின்றன. பல்கலைக்கழகங்களில் உள்ள பிள்ளைகளை போதைப்பொருளுக்குப் பழக்குவதிலும் ஒருவித போக்கு காணப்படுவதை எம்மால் பார்க்க முடிகிறது” எனக் குறிப்பிட்டார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்