இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ரஜீவ் அமரசூரிய தலைமையிலான குழுவினர் பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
பூட்டான் நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் சிறப்புரை ஆற்றியமை இவ்விஜயத்தின் முக்கிய அம்சமாகும்.
பூட்டான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டுபா ட்ரூக்பா (Duba Drukpa) உள்ளிட்ட 8 நீதிபதிகள் அடங்கிய குழுவினர், விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதிநிதிகளை உற்சாகமாக வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.