அரசியலமைப்பிற்கான 22வது திருத்தம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த முயல்வது குறித்து அரசாங்கம் ஏன் அச்சமடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்
சமூக ஊடக பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டம் குறித்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழமைக்கு மாறாக கலக்கமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அவர்களின் எதிர்வினை ஒரு குற்றவுணர்ச்சி மனப்பான்மை என்ற எண்ணத்தை உருவாக்ககூடும்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நல்லநோக்கத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள அழைப்பை ஏற்பது அவர்களின் சொந்த விருப்பம் எனினும் நான் ஒரே மாதிரியான சிந்தனையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளப்போகின்றேன் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.