இந்த அக்டோபர் மாதம் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் சில ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய விரும்புவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்த கருத்துக்களுக்காக, கிழக்கு ஒன்ராறியோவில் உள்ள எலிசபெத்தவுன்-கிட்டிலி (Elizabethtown-Kitley) நகரியத்தின் கவுன்சிலரான ராப் ஸ்மித் (Rob Smith) 30 நாட்கள் ஊதியத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.
இந்த இலையுதிர் காலத்தில் மேயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் சில ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாகக் கூறியதைத் தொடர்ந்து, எலிசபெத்தவுன்-கிட்டிலியில் மேயர் பதவிக்குப் போட்டியிடும் கவுன்சிலர் ஒருவர் ஒரு மாத ஊதியத்தை இழக்க நேரிடலாம்.
செவ்வாய்க்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்ட அறிக்கையில், அக்டோபர் 26 அன்று தான் மேயரானால் பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக, நான்கு முறை கவுன்சிலராக இருந்த ராப் ஸ்மித், நகராட்சி ஊழியர்களிடமும் பொதுமக்களில் சிலரிடமும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியதாக அந்த கிழக்கு ஒன்ராறியோ சமூகத்தின் நேர்மை ஆணையர் (integrity commissioner) கண்டறிந்துள்ளார். “மோசமான பணித் திறன் மற்றும் குறித்த ஊழியர்கள் கவுன்சிலுக்குத் தெரிவிக்காமல் மேயர் கேட்டதைச் செய்தார்கள் என்றும், முக்கியமான தகவல்களை அவர்கள் கவுன்சிலுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் ஸ்மித் தன் காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்” என்று இச்சம்பவம் குறித்து டோனி ஈ. பிளெமிங் எழுதியுள்ளார்.