செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மாநாட்டுக்கு ஆதரவு

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை வழங்குவதோடு, அவர்களுடன் தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை முன்னெடுக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(18.08.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்திடம் கண் முன்னே ஒப்படைக்கப்பட்ட கணவன், குழந்தைகள்,உறவுகள், காணாமல் போயுள்ள நிலையில், காணாமல் போயிருக்கும் உறவுகளைத் தேடி கொண்டிருக்கின்ற காணாமல் போன உறவுகளின் தாய்மார்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார்கள்.

உண்மையில் இந்த உறவுகளின் போராட்டங்கள் அவர்களுடைய தேடுதலுக்கான நடவடிக்கைகள் தான் இன்றைக்கும் எங்களுடைய தேசத்திலே உலக நாடுகளில் பேசும் பொருளாக இருந்து கொண்டிருக்கிறது.

அது ஒன்று தான் எங்களுடைய தேசத்தின் மீது இன்றைக்கு உலக நாடுகள் தங்களுடைய பார்வையை திருப்புகின்ற ஒரு செயல்பாடாக இருக்கிறது. செம்மணி மனித புதைகுழி, எங்களுடைய இனத்தினுடைய படுகொலைகள், உயிரோடு புதைக்கபட்டவர்களைத் தோண்டுகின்ற ஒரு மாபெரும் இனத்தினுடைய இந்தப் படுகொலையை நினைவூட்டுகின்ற செயல்பாடாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்ற சூழலிலே, காணாமல் போனவர்களை, தேடுகின்ற உறவுகளுடைய அந்த உடல்களும் அங்கே இருக்கலாம் என்ற ஒரு சந்தேகத்தோடு இன்றைக்கு எல்லோரும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அதைவிட பொதுமக்கள், ஏனைய இடங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அங்கே புதைக்கப்பட்டிருப்பார்களா? தமிழினத்தை அழிக்க, ஒழிக்க நினைக்கிற இந்த சக்திகள் எந்த அளவுக்கு படுபாதகமான ஒரு செயல்பாட்டை எங்கள் மீது செய்திருக்கிறது என்பதை இன்றைக்கு வெளிப்படையாக தெரிவிக்கிற ஒரு உடைமை என்னவென்றால், அது செம்மணி புதைகுழி என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அதன் அடிப்படையில் காணாமல் போனவர்களின் தாய்மார்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள அவர்களுடைய மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை நல்குகிறது.

பூரண ஆதரவுடன் அவர்களோடு தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை நாங்கள் நிச்சயமாக செய்ய இருக்கிறோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக

6fe740e3-d63a-4122-8ada-4e8754dc10ee

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் “Peace Summit & Conference 2026”

October 9, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் “Peace Summit & Conference 2026” சர்வதேச மாநாடு

gs

கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்பு; 1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

October 9, 2026

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி,