நீதிமன்றம் தீர்ப்பைவழங்குவதற்கு முன்னரே எனக்கு சிறைத்தண்டனை கிடைக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுபபினர்கள் எவ்வாறு எதிர்வுகூறுகின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கையுள்ளது நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பையும் நான் மதிப்பேன் ஏற்றுக்கொள்வேன்.
நீதிபதிகள் வழக்கை விசாரணை செய்யவேண்டும் ஆதாரங்களை ஆராயவேண்டும் தீர்ப்பை வழங்கவேண்டும்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு இவ்வாறுதான் அமையும் என அமைச்சர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் அதனால்நீதித்துறை மீது மக்களிற்கு சந்தேகம் ஏற்படும். அமைச்சர்களுக்கு எவ்வாறு தெரியும்என மக்கள் கேள்வி எழுப்புவார்கள்.
அமைச்சர்கள் தீர்ப்புகளை வழங்க கூடாது நீதிமன்றமே வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.