செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் – நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14ஆம் திகதி இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவிகளின் நினைவாக, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் நினைவுத்தூபி எழுப்பப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை (14) வள்ளிபுனம் இடைக்கட்டு சந்திப் பகுதியில் நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

செஞ்சோலைப் படுகொலை என்பது மறக்கவே முடியாத ஒரு துயரச் சம்பவமாகும். ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் படுகொலைகள் இடம்பெற்ற நிலைமைகளும் இருந்தன.

அந்தப் படுகொலைகளின் வரிசையில் செஞ்சோலைப் படுகொலை சற்று வித்தியாசமானது. வெள்ளை தரித்த பாடசாலை மாணவிகள் முதலுதவி பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெள்ளை உடைகள் எல்லாம் சிவப்பாக மாறிய கொடூரம் அரங்கேறியது.

ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் இவ்வாறான கொடூரங்களும் நடத்தப்படும் என்பதை முழு உலகிற்கும் வெளிப்படுத்திக் காட்டுகின்ற சம்பவமாக, இந்த செஞ்சோலைப் படுகொலை அமைகின்றது.

இந்த படுகொலை இடம்பெற்று 20 வருடங்களாகியும், இப்படுகொலை ஏற்படுத்திய ரணமும் வலியும் இன்னமும் ஆறவில்லை.

இந்த பிள்ளைகளை இழந்த பெற்றோரும் உறவினரும் உரித்துடையோரும் இன்றும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர். படுகொலைக்கான நீதியைக் கோருகின்றனர்.

இருப்பினும் இந்த படுகொலைக்கான நினைவுத்தூபி ஒன்று இதுவரை அமைக்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது. நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

எனவே எமது பிள்ளைகளை நினைவுகூரும் வகையிலான நினைவுத்தூபி ஒன்று எழுப்பப்படும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நினைவேந்தல் நிகழ்வானது அரசியல் நிகழ்வல்ல. படுகொலை செய்யப்பட்ட எமது பிள்ளைகளை நினைவுகூருவதும், அந்த படுகொலைக்கான நீதியைக் கோருகின்ற ஒரு பொது நிகழ்வாகும்.

எனவே இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு சகல தரப்பினரும் வருகைதர வேண்டும். இந்த படுகொலை தொடர்பான வரலாறுகள் தற்போதைய மாணவர்களுக்கும் எடுத்துச் சொல்லப்படவேண்டும். அவர்களூடாக எதிர்கால சந்ததியினருக்கும் இந்த வரலாறுகள் கடத்தப்படவேண்டும்.

எத்தடை வருகின்றபோதும் இந்த நினைவேந்தல் நிகழ்வை தொடர்ச்சியாக நடத்தி வருகின்ற ஏற்பாட்டாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

dead'

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் மீட்பு: காவற்துறையினர் தீவிர விசாரணை!

August 24, 2026

யாழ்ப்பாணம், காரைநகர் வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ANURA PARL

சுரேஸ்சாலேயின் தாயாரும் அனுரவிற்கு கடிதம் எழுதினார்-

August 24, 2026

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேயின் தடுப்;;புக்காவல் உத்தரவை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நீடிக்க கூடாது என சாலேயின் தாயார்

suresh11

சுரேஸ் சாலேக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு – தேசிய அமைப்புகளின் ஒன்றியம்

August 24, 2026

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பிப்பதை ஜனாதிபதி தவிர்க்கவேண்டும் அவரை உடனடியாக

778972206_1621427252686601_4469929818179508992_n

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்க இராணுவம் முயற்சி: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு..!

August 24, 2026

பலாலி பகுதியில், இராணுவம் தொடர்ந்து கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுற்றி நடைபெறும் போராட்டத்தில் இன்றைய தினம்

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்