காவிரி விவகாரம்: எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம்! ஓசூரில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம் – பயணிகள் கடும் அவதி!

பெங்களூரு / ஓசூர்
மேகதாதுவில் அணை கட்ட மறுப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழக – கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேகதாது அணை விவகாரம் – பின்னணி:
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே சமயம், காவிரியின் குறுக்கே அணை கட்டியே ஆகவேண்டுமென கர்நாடக அரசும், கன்னட அமைப்புகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
கன்னட அமைப்புகளின் முழு அடைப்புப் போராட்டம்:
இந்நிலையில், காவிரி நீரைத் தமிழகத்திற்குத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தியும் கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் வரும் 13-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கர்நாடக அரசு கேட்டுக்கொண்டது. இருப்பினும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என கன்னட கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
வாகனங்களைத் தடுத்து நிறுத்த எச்சரிக்கை:
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், கன்னட விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லாத நிலையில், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தினார். மேலும், மேகதாதுவில் அணை கட்டியே ஆக வேண்டும் எனவும் கண்டிப்பாகத் தெரிவித்தார். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 10-ஆம் தேதியான இன்று காலை 11 மணிக்குக் கர்நாடக – தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, இன்று தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் வாகனங்களைத் தடுத்து நிறுத்த இருப்பதாகவும், தமிழ்நாட்டு வாகனங்களைக் கர்நாடகாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம் – எல்லையில் பதற்றம்:
இதனால் இன்று தமிழ்நாடு பேருந்துகள் கர்நாடகாவுக்குள் நுழைய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஓசூர் பணிமனை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, காலை 9 மணியளவில் காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலைப் பொறுத்து, தமிழ்நாடு அரசுப் பேருந்துகளைக் கர்நாடகாவிற்குள் இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காலை 9:30 மணி முதல் ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மற்றும் கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனியார் பேருந்துகளில் முண்டியடிக்கும் பயணிகள்:
திடீரெனப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், வேலை நிமித்தமாகவும், அவசரத் தேவைகளுக்காகவும் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளுக்குச் செல்ல ஓசூர் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எல்லையில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகே பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அத்திப்பள்ளி வரை நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருவதால், அவற்றில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு செல்கின்றனர்.
காவிரி நீர் திறப்பு – தற்போதைய நிலவரம்:
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவிற்குப் பெய்யவில்லை. இதனால் ஆண்டுதோறும் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குத் திறந்துவிடப்படும் காவிரி நீரானது இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டிற்கு 15 நாட்கள் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு இந்த ஆணைக்கு இணங்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில்தான், கேரளா, கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாகக் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட கர்நாடக அணைகள் நிரம்பின. அணையின் பாதுகாப்பு கருதி மட்டுமே உபரி நீரானது தமிழகத்திற்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#CauveryIssue #MekedatuDam #KarnatakaProtest #VatalNagaraj #HosurBusStand #Bengaluru #TamilNaduNews #TNSTC #BorderTension #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
maalaimalar_import_h-upload_2025_11_04_21098709-ponmudi

“பொன்முடிக்கு மீண்டும் சிக்கல்?” – செம்மண் குவாரி வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

November 24, 2026

சென்னை: செம்மண் வெட்டி எடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துக் காவல்துறை தாக்கல் செய்த மனுவுக்கு

dailythanthi_2026-11-24_llb7aoxx_mane

“கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீதான வழக்கு!” – விசாரணை மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

November 24, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

photo-collage.png

கனமழையிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தின நினைவேந்தல்

November 24, 2026

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொற்கேணி பிள்ளையார் கோயில் முன்றலில் மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (24.11.2026) கொட்டும் கனமழைக்கு

muji

இலங்கையில் மொசாட் உளவாளிகளா?

November 24, 2026

இலங்கையில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கும் மொசாட் உளவாளிகளுக்கும் அனுமதி வழங்குவது நாட்டின் தேசிய பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக

robb

கொழும்பில் தங்க நகைக் கொள்ளை

November 24, 2026

கொழும்பில் உள்ள தங்க நகைக் கடைகளில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் 37

IMG_2560

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

November 24, 2026

இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப் பத்திரம் வழங்கும் உத்தியோகபூர்வ இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

IMG_2585

நாட்டின் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது

November 24, 2026

நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல்

IMG_2584

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!

November 24, 2026

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது. 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய

IMG_2583

திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்!

November 24, 2026

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உள்ளடக்கங்கள் மற்றும் வன்முறையை

IMG_2582

இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை!

November 24, 2026

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள

vikatan_2026-11-23_ubr0qbgo_New-Project-44

“அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிய முன் அனுமதி வேண்டும்!” – ஆளுநருக்கு திமுக கடிதம்!

November 24, 2026

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

pil

இரண்டு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட நபரால் பரபரப்பு

November 24, 2026

தமது இரண்டு குழந்தைகளுடன் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து நபர் ஒருவர் வாவியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட சம்பவத்தால்