சசிகுமாரின் ‘ஈசன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, இன்று கதையின் நாயகனாக நடித்து வரும் நடிகர் துஷ்யந்த் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘என்னமோ சொன்னிங்க பெருசா…’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ் ‘ திரைப்படத்தில் துஷ்யந்த், ஜனனி குணசீலன், ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணியம் சிவா, ஆர். மோகனா , பிரசன்னா பாலச்சந்திரன், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தில் ராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகனா தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்காக காத்திருக்கும் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என்னமோ சொன்னிங்க பெருசா.. இந்த உலகத்தில் இது என்ன புதுசா…’ என தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத , பின்னணி பாடகர் கானா சிவா பாடியிருக்கிறார். பாடலின் வரிகள்- இசை பாணி- மெட்டு- இசை கோர்வை- குரல் – ஆகிய அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.