சென்னை
மத்திய அரசால் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தொகுதி மறுவரையறை (Delimitation) சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், தமிழகத்தில் தற்போதுள்ள 39 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிரடியாக உயர வாய்ப்புள்ளது. அவ்வாறு உயரும் பட்சத்தில், தமிழகத்தில் அமையவுள்ள உத்தேச 59 மக்களவைத் தொகுதிகளின் முழுப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
தொகுதி மறுவரையறை பின்னணி:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டால், நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகள் 850 ஆக உயரும். இதில் தமிழகத்தின் தொகுதிகள் 39-லிருந்து 59 ஆக அதிகரிக்கும்.
இருப்பினும், மக்கள்தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இதனால் பாதிக்கப்படும் என்பதால் இதற்குத் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து விவாதிக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (ஆகஸ்ட் 8) சென்னை கலைவாணர் அரங்கத்தில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இந்தச் சூழலில், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தமிழகத்தில் உருவாவதற்கு வாய்ப்புள்ள உத்தேச 59 நாடாளுமன்றத் தொகுதிகளின் விவரம்:
உத்தேச 59 மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்:
-
திருத்தணி
-
திருவள்ளூர்
-
சென்னை வடக்கு
-
சென்னை கிழக்கு
-
சென்னை மத்திய
-
சென்னை தெற்கு
-
சென்னை மேற்கு
-
தாம்பரம்
-
செங்கல்பட்டு
-
காஞ்சிபுரம்
-
வேலூர்
-
திருப்பத்தூர்
-
ராணிப்பேட்டை
-
திருவண்ணாமலை
-
வந்தவாசி / ஆரணி
-
திண்டிவனம்
-
விழுப்புரம்
-
கள்ளக்குறிச்சி
-
கடலூர்
-
சிதம்பரம்
-
ஓசூர்
-
கிருஷ்ணகிரி
-
தர்மபுரி
-
சேலம்
-
மேட்டூர்
-
ராசிபுரம்
-
நாமக்கல்
-
ஈரோடு
-
கோபிசெட்டிபாளையம்
-
திருப்பூர்
-
தாராபுரம் (அல்லது) பழனி
-
பொள்ளாச்சி
-
கோவை கிழக்கு
-
கோவை மேற்கு
-
நீலகிரி
-
கரூர்
-
பெரம்பலூர்
-
அரியலூர் (அல்லது) லால்குடி
-
திருச்சிராப்பள்ளி
-
தஞ்சாவூர்
-
கும்பகோணம்
-
மயிலாடுதுறை
-
நாகப்பட்டினம்
-
திருவாரூர்
-
புதுக்கோட்டை
-
சிவகங்கை
-
ராமநாதபுரம்
-
தூத்துக்குடி
-
திருச்செந்தூர்
-
திருநெல்வேலி
-
நாங்குநேரி (அல்லது) கன்னியாகுமரி
-
கன்னியாகுமரி (அல்லது) நாகர்கோவில்
-
தென்காசி
-
சிவகாசி
-
விருதுநகர்
-
தேனி
-
மதுரை கிழக்கு
-
மதுரை மேற்கு
-
திண்டுக்கல்
#DelimitationBill #TNConstituencies #LokSabhaSeats #TamilNaduNews #Chennai #ChiefMinisterVijay #TVKGovernment #TNPolitics #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNNewsUpdates #ParliamentSeats #TamilNews