பொலிஸாரின் விசேட அதிரடிப்படையின் நேரடி மேற்பார்வையின் கீழ், பதுளைப் சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்புத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மோதல்கள் இடம்பெற்ற மஹர சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட 10 கைதிகளும் இச்சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை வளாகத்தில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.