எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட் மற்றும் வினோனா டிரைவ் பகுதிக்கு அருகில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, 19 வயது ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகரத்தின் மேற்குப் பகுதியில் கார் கவிழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஓட்டுநர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் வினோனா டிரைவ் மற்றும் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட் பகுதியில் அதிகாலை 2:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த சில கார்கள் மீது மோதிய பின்னரே பக்கவாட்டில் கவிழ்ந்துள்ளதாகத் தெரிவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காரில் சிக்கியிருந்த 19 வயது ஓட்டுநரைத் தீயணைப்புப் படையினர் மீட்டதாகக் காவல்துறை கூறியது. அவர் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து நடந்த சமயத்தில் வாகனத்திற்குள் வேறு பயணிகள் யாரும் இருக்கவில்லை.
குறிப்பிட்ட நபர் மீது நெடுஞ்சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (Highway Traffic Act) கீழ் கவனக் குறைவாக வாகனத்தை ஓட்டியதற்காக (careless driving) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.