நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையினால் 04 மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (05) புதன்கிழமை காலை 9:00 மணி முதல் நாளை (06) வியாழக்கிழமை காலை 9:00 மணி வரை 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.