சென்னை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலினை காவல்துறை கைது செய்துள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம் என்றும், அவர் தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாகப் பேசுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு என்றும், ஆனால் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்று அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம் என்றும், அந்தப் பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டுச் சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிராக அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தவெக அரசை திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
#EdappadiPalaniswami #UdhayanidhiStalin #AIADMK #DMK #TVKGovt #TNAssembly #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #PoliticalUpdate #TamilNewsLive