நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (02.08.2026) சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.