பேசாலையில் கடலில் மூழ்கிக் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல்போயிருந்த மீனவர் இன்று சனிக்கிழமை (1) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (30) மாலை 6 மணியளவில் காட்டாஸ்பத்திரி மீன்பிடித் துறையிலிருந்து கண்ணாடியிழைப் படகில் இரு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடலில் வலையைப் பரப்பிவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் படகில் எரிபொருள் தீர்ந்துபோயுள்ளது.

இதனையடுத்து, நீந்திச் சென்று கரையில் இருந்து எரிபொருளை எடுத்துவரும் நோக்கில் குறித்த இளைஞர் கடலில் குதித்துள்ளார். எனினும், அக்காலப் பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக அவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.

அப்போது அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த பிற மீனவர்கள், கடலில் தத்தளித்த படகையும் அதிலிருந்த மற்றைய மீனவரையும் மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர். அத்துடன், நீந்திச் சென்று காணாமல்போன இளைஞரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று (01) காலை எருக்கலம்பிட்டி கடற்பகுதியில் சடலமொன்று மிதப்பதாக அப்பகுதி மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காட்டாஸ்பத்திரி மீனவர்கள், சடலத்தை மீட்டுப் பேசாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதுடன் கரைக்கும் கொண்டுசென்றனர்.

மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

MAHARA2

மஹர சிறைச்சாலை வன்முறையில் கைதி ஒருவர் பலி; 6 பேர் காயம்

August 1, 2026

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று

6

கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன: திமுக பகிரங்க குற்றச்சாட்டு!

August 1, 2026

சென்னை: நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முறையாகத் தேர்தல் நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத்

FJ2EC5CVSSM7SDYWIOEWAVR7XY

கிரெமோனா (Cremona) அருகே 21 வயது பெண்ணின் சடலம் மீட்பு: சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து தீவிர விசாரணை

August 1, 2026

அல்பர்ட்டா (Alta.), கிரெமோனா அருகே பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

P4SXUOOD6FCQNOVEGHD67CWGZU

நோர்த் யார்க்கில் (North York) நெடுஞ்சாலை 400-ஐ முடக்கிய கொடூர விபத்து: ஒருவர் பலி

August 1, 2026

சனிக்கிழமை காலை நோர்த் யார்க்கில் உள்ள நெடுஞ்சாலை 400 (Highway 400)-ல் ஏற்பட்ட கொடூர வீதி விபத்து காரணமாக, வடக்கு

5

200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு 4 மடங்கு வரை மின் கட்டணம் உயர்ந்தது எப்படி? – சீமான் ஆவேச கேள்வி!

August 1, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு மாதம் பெரும்பாலான வீடுகளுக்கான மின்கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை

4

5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடையை நீட்டித்த உயர்நீதிமன்றம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

August 1, 2026

சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

3

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை த.வெ.க அரசு உடனடியாக கூட்ட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

August 1, 2026

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும் என விடுதலை

gan

பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார்

mi

மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்!

August 1, 2026

அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில்

co

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers)

donadltrumps

“அமைதி வாரியம்” எட்டிய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கருத்து

August 1, 2026

காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதமேந்திய பலஸ்தீனக் குழுக்களை முழுமையாக ஆயுதமேற்கச் செய்வதற்காக, தன்னுடைய “அமைதி வாரியம்”

ita

தெற்கு இத்தாலியில் பூமியதிர்ச்சி : கட்டடங்கள் சேதம்

August 1, 2026

தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகில் அமைந்துள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் வெள்ளிக்கிழமை (31ஆம் திகதி) 4.7 ரிச்டர் அளவில்