மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும், அங்கு நடைபெறும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளைத் தடுத்து நிறுத்தி, ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(31) நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அத்திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் நிதியொதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய பாலங்கள் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாகச் சிறிய பாலங்கள் முதல் பாரிய அளவிலான பாலங்களைப் புனரமைப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

பட்டிருப்பு பாலம், மண்டூர் – குறுமண்வெளி பாலம், அம்பிளாந்துறை – குருக்கள்மடம் பாலம், சந்திவெளி – திகிலிவெட்டை பாலம், வெல்லாவெளி – திவுலானை வீதி மற்றும் அம்பிளாந்துறை – வில்லுக்குளம் வீதி ஆகிய திட்டங்களுக்கான சாத்தியவள ஆய்வு அறிக்கைகளை விரைவாகத் தயாரித்து, அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது குறித்து இங்கு வலியுறுத்தப்பட்டது.

உறுகாமம் மீனவர் சங்கம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இறங்குதுறைப் பிரச்சினை தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டன.

இதன்போது மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து மீனவர்களும் உறுகாமம் குளத்தில் அமைந்துள்ள இறங்குதுறையில் தங்களது தோணிகளை நிறுத்திப் பயன்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விவசாயிகளின் நெல் கொள்வனவு, நெல்லுக்கான உத்தரவாதக் கொள்விலை, விவசாயிகளின் நலன் மற்றும் மாவட்ட மக்களின் நீண்டகால அபிவிருத்தித் தேவைகள் ஆகிய அனைத்தும் விரிவாக ஆராயப்பட்டன. இவ்விடயங்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்கள் இனியும் தாமதமின்றிச் செயற்பட்டு, மக்களுக்கு நடைமுறைப்படியான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு – மாதவனை பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது, மகாவலி அதிகாரசபை ஊடாகக் கால்நடைப் பண்ணையாளர்களுக்குக் காணி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் வழங்கிய உறுதிமொழி குறித்து ஆராயப்பட்டது. அதேவேளை, தற்போது மயிலத்தமடு – மாதவனை பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவருவது குறித்துப் பண்ணையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவ்வாறான அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அங்கிருந்து வெளியேற்றி, கால்நடை பண்ணையாளர்களுக்குக் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, வனவளத் திணைக்களத்தினர் இவ்விடயத்தில் பக்கச்சார்பாகச் செயற்படுவதாகவும், பட்டிப்பளை, மயிலத்தமடு போன்ற பகுதிகளில் காடுகளை வெட்டி அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்கும்போது அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், சாதாரண பொதுமக்கள் இவ்வாறு செய்தால் வழக்குத் தாக்கல் செய்வதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பதி சிறிநாத், கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வி.நவநீதன், ஆர். நிர்மலராஜ், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள், காவல்துறைத் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது