பிரகீத் எக்னலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகார வழக்கு

கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விவகாரத்தில் வழக்கின் நான்காவது சாட்சியாளரான சுமதிப்பால சுரேஷ்குமார் எனும் தவேந்திரன் அல்லது முரளியிடம் மீண்டும் சாட்சியங்களைப் பெறுவதற்கு கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் வெள்ளிக்கிழமை (24) அனுமதி அளித்தது.

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொட விவகாரம் தொடர்பிலான வழக்கு வெள்ளிக்கிழமை (24) மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையிலான நலின் ஹேவாவசம், லக்மாலி ஹேவாவசம் ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது ஏற்கனவே வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைப் பரிசீலனை செய்த நீதிபதிகள் குழாம், நான்காவது சாட்சியாளரான முரளியிடம் மீண்டும் சாட்சியத்தைப் பதிவு செய்யத் தீர்மானித்தது. அதற்குரிய திகதியை நீதிமன்ற விடுமுறையின் பின்னர் வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தது.

முன்னதாக முரளி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்துக்கும் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கி இருந்தார். அந்த ஒப்புதல் வாக்குமூலங்களில் இருந்த விடயங்களுக்கு மாறாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முரளி மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

தொடர்ந்து முரளியை முறைப்பாட்டாளர் தரப்புக்குப் பாதகமான சாட்சியாளராகக் கருதி நடவடிக்கை எடுப்பதாகச் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது. எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிரேஷ்ட சட்டத்தரணி கே. எஸ். ரத்தினவேல் ஊடாக மேல் நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் ஒன்றினைச் தாக்கல் செய்த முரளி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தான் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழங்கிய சாட்சியமானது பலவந்தத்தின் அடிப்படையில் வழங்கியது எனவும், சரியான சாட்சியத்தை வழங்க தனக்கு மீண்டும் அவகாசம் தருமாறும் கூறியிருந்தார்.

இந்த விண்ணப்பத்தை மையப்படுத்தி சட்டமா அதிபர் சார்பிலும் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விண்ணப்பம் செய்யப்பட்டது. எனினும் பிரதிவாதிகளான இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒன்பது பேர் சார்பாகவும் இதற்கு கடும் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இது தொடர்பிலான உத்தரவை நேற்று அறிவித்த கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள், நான்காவது சாட்சியாளரான சுமதிபால சுரேஷ்குமார் அல்லது முரளியிடம் மீண்டும் சாட்சியத்தைப் பதிவு செய்வதற்கு நீதிமன்றம் தீர்மானிப்பதாக அறிவித்தனர். அதன்படி இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.