தோட்ட இளைஞர் தாக்கப்பட்ட குற்றச்சாட்டு ; சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்!

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல உனுகொல்ல தோட்டத்தில், இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் தொடர்பில் பரபரப்பு நிலவி வருகிறது.

மல்வத்தவெளி பிளான்டேஷன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை (17) முகாமையாளர் அலுவலகத்தில் முகாமையாளரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயதொழில் ஒன்றைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தில் கையொப்பம் பெறுவதற்காக அந்த அலுவலகத்துக்குச் சென்றபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து தோட்டப் பொதுமக்கள், இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் மற்றும் பதுளை மாவட்ட அமைப்பாளர் பகி பாலச்சந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது பிரத்தியேக செயலாளரும் மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளருமான ரகுராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இளைஞர் தாக்கப்பட்டமை தொடர்பில், முகாமையாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான முதற்கட்ட விசாரணைகள் திங்கட்கிழமை (20) நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தொழிற்சங்க ரீதியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரகுராஜ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

754700354_1568716991311680_3574303954992461174_n

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

July 28, 2026

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள்

754126920_3989629514678608_5016126000290553254_n

ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை நடைபவனி

July 28, 2026

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை

759299420_1728341295963057_5986583890373510739_n

அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலய அரசிய அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

July 28, 2026

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில்

court-judge-hammer-gavel-696x398

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

July 28, 2026

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை

758874719_1597010588461601_4345952432120067241_n

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

July 28, 2026

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

SAUDHI COURT

சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு

July 28, 2026

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”