கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம்

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக இந்நாட்டின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 303 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் பொதுக் கல்விக்காக 160 பில்லியனும், உயர்கல்விக்காக 122 பில்லியனும் மற்றும் தொழிற்கல்விக்காக 20 பில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால் மாத்திரம் அவற்றை செலவிடாமல், தேசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை இனங்கண்டு நிதியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மூலதனச் செலவினமான 08 பில்லியன் ரூபா இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்தின் கீழ் செயற்படும் 310 தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு காலாண்டுகளில் 57,959 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு (Ocean University) நிரந்தர காணி ஒன்றை வழங்குவது குறித்தும், வாழ்க்கைத் தொழில்சார் தொழினுட்பவியல் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைச் இணைத்துக்கொள்வதை அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும் அவற்றின் தரத்தையும் மேம்படுத்தி, பிராந்திய மட்டத்தில் மாணவர்கள் தொழில்நுட்பப் பட்டங்களையும் டிப்ளோமாக்களையும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பொதுக் கல்வியின்கீழ் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வெளிநாட்டு உதவிகளின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, அவற்றை வெறும் கடன் சுமையாக மாற்றிக்கொள்ளாமல், இந்நாட்டின் கல்விக் கொள்கைகளுக்கு இணங்கவும் தேவைகளின் அடிப்படையிலும் மாத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப, தகுதியான பயனாளிகளுக்கே நன்மைகள் சென்றடைவதை உறுதி செய்வதற்கான முன்னுரிமைகளைத் தயாரித்துக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர் உதவித்தொகைத் திட்டங்களுக்காக ஜனாதிபதி நிதியம் எப்போதும் தயாராக இருப்பதால், அத்தகைய தேவைகள் குறித்த முன்மொழிவொன்றைத் தயாரித்து அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், 2026 ஆம் ஆண்டு முதல் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்தும், தேசிய கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரியர் மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தற்போது நடைமுறையிலுள்ள மாணவர் காப்புறுதித் திட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

2027ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக 382 பில்லியன் ரூபா பெருந்தொகையான முதலீட்டை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள டிஜிட்டல் பரிமாற்றத் திட்டம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

“டித்வா” சூறாவளியினால் சேதமடைந்த 20 பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளைப் புனரமைப்பதற்காக 1.9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் கலந்துரையாடுவதற்கும், அதற்காக விசேட ஆணைக்குழுவின் ஊடாக நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

754700354_1568716991311680_3574303954992461174_n

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

July 28, 2026

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள்

754126920_3989629514678608_5016126000290553254_n

ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை நடைபவனி

July 28, 2026

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை

759299420_1728341295963057_5986583890373510739_n

அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலய அரசிய அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

July 28, 2026

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில்

court-judge-hammer-gavel-696x398

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

July 28, 2026

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை

758874719_1597010588461601_4345952432120067241_n

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

July 28, 2026

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

SAUDHI COURT

சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு

July 28, 2026

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”