ஒக்டோபரில் ஸ்ரீலங்கன் – ஏர்பஸ் இலஞ்ச வழக்கு முன்னேற்ற அறிக்கை!

ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் விமான சேவைக்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யப்பட்ட போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேற்படி வழக்கு செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கு விசாரணையின் போது இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கை ஒன்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிவிப்பதற்காக திகதி ஒன்றை வழங்குமாறும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.

இதன்போது, பிரபல வர்த்தகரான நிமால் பெரேரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதர முஹந்திரம்கே நீதிமன்றில் விளக்கமளிக்க அனுமதி கோரினார். எனினும், குறித்த நபர் இதுவரை இவ்வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்படாததால் அது தொடர்பில் தற்சமயம் விளக்கமளிப்பது அவசியமற்றது என நீதிவான் சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை, இந்த வழக்கில் முதலாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஶ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.

மேலும், இவ்வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபரான ஷமிந்திர ராஜபக்ஷ ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஏற்கனவே நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நே்றைய தினம் மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்பனங்களை பரீசிலித்த நீதிவான், வழக்கை எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட தோடு, அன்றைய தினம் விசாரணை முன்னேற்ற அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்