களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்தின் மீது வழக்கு

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்ததாக அடையாளம் காணப்பட்ட உணவகத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் இன்று(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது குறித்த உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட் கிழமை(13) இரவு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இந்த […]
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் (15.07.2026) நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் கைதாகியுள்ளார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவர் கம்பஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு (AI) டீப்ஃபேக் முதலீட்டு மோசடியில் சிக்கி $83,000 பணத்தை இழந்த ஒன்டாரியோ பெண்!

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கிரிப்டோகரன்சி (cryptocurrency) முதலீடுகளை ஊக்குவிப்பது போல் போலியாக உருவாக்கப்பட்ட ஏஐ (AI-generated) வீடியோக்களை நம்பி ஏமாந்ததால், தான் 83,000 டாலர்களை இழந்துள்ளதாக ஒன்டாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆக்டன் (Acton) பகுதியைச் சேர்ந்த டெபோரா ஃபிரீசென் (Deborah Friesen) என்பவர், சமூக ஊடக விளம்பரம் ஒன்றில் பிரதமர் மார்க் கார்னியின் டீப்ஃபேக் (deepfake) வீடியோவை முதன்முதலில் பார்த்துள்ளார். அதில், கனேடியர்கள் ஆன்லைன் வர்த்தக தளம் மூலம் எளிதாக பணம் […]
2024 ரிச்மண்ட் ஹில் பதின்ம வயது இளைஞன் கொலை வழக்கு: கனடா முழுவதும் தேடப்பட்டு வந்த பெண் அல்பர்ட்டாவில் கைது!

ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு 16 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்பட்டு, கனடா முழுவதும் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர் அல்பர்ட்டா (Alberta) மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மிசிசாகாவைச் (Mississauga) சேர்ந்த 27 வயதான கேத்தரின் பெர்ஜரான்-பின்சரோன் (Katherine Bergeron-Pinzarrone) என்ற பெண், கடந்த 2026 ஜூலை 9 அன்று கால்கரி பொலிஸாரால் (Calgary Police Service) கைது செய்யப்பட்டதாக யோர்க் பிராந்திய […]
இலங்கை: நீர்கொழும்பு சிறை வன்முறைக்குப் பின் மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைகளுக்கும் இதர கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதாகத் தங்களுக்குப் புகார்கள் வந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. மேலும், கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகியுள்ள நிலையிலும், பல கைதிகளின் குடும்பத்தினருக்கு தங்களது உறவினர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த தகவல்களை சிறைத்துறை அதிகாரிகள் இன்னும் வழங்கவில்லை. இது அவர்கள் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் பெரும் கவலையளிக்கின்றன. சர்வதேச சட்டத்தின்படி, அரச […]
தனது கட்சியின் தொண்டர்கள் மூலம் அரச நிர்வாகம் அனைத்து மட்டங்களையும் கட்டுப்படுத்து முயற்சிக்கிறது!

தற்போதைய அரசு தனது கட்சியின் தொண்டர்கள் மூலம் அரச நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு விசித்திரமான மற்றும் ஜனநாயகத்துக்குப் புறம்பான ஆட்சி முறையைத் திணிக்க முயற்சிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டியுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், “அரசைக் கைப்பற்றியதுடன் நில்லாமல், அரச இயந்திரத்தையும் முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் […]
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகளுக்கு எதிராக, இலங்கையின் கூட்டு எதிர்க்கட்சி இன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் குழுவினர், இன்று (15) புதன்கிழமை காலை ஐநா அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பான விரிவான எதிர்ப்பு மாஜரை கையளித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயக விழுமியங்கள் சீர்குலைக்கப்படுவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடித் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த […]
சஜித் பிரேமதாச நாமலின் கடிதத்துக்கு பதிலளிக்கவில்லை?

நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்தக் கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. கடந்த 7ஆம் திகதி நாமல் ராஜபக்சவினால் அனுப்பப்பட்ட அக்கடிதத்தில், “உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை தன்னிச்சையான முறையில் நீடிக்க முயற்சிப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதற்கு எதிராக, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம்” குறித்து சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. […]
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு: கனடாவில் சர்வதேச இந்திய மாணவரை நாடு கடத்த உத்தரவு

இந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் கபில சர்மாவிற்குச் சொந்தமான ‘காப்ஸ் கஃபே’ (Kap’s Cafe) மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதத்தை மறைத்த குற்றச்சாட்டின் கீழ், லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) சர்வதேசக் குற்ற கும்பலுடன் தொடர்புடைய சர்வதேச இந்திய மாணவர் ஒருவரை நாடுகடத்துமாறு கனடிய குடிவரவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய விபரங்கள் பின்வருமாறு: சந்தேகநபர்: ஜஷன்தீப் சிங் (Jashandeep Singh) என்ற 23 வயதுடைய இந்திய மாணவர், 2022 ஆம் ஆண்டு […]
முல்லைத்தீவில் மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானப் போத்தல்கள் அடங்கிய தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கோட்டாபய கடற்படைத் நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், முல்லைத்தீ கடற்படை, முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஐயாயிரத்து ஐந்நூற்று எழுபத்தைந்து மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் […]