யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதி ஒருவர் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய இந்த நபர், திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு பின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு, மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
காயமடைந்த உத்தியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.