வத்தளை, ஹுனுப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புதர் காடொன்றிலிருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் நேற்று (13) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இந்த முடிவு சுமார் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த தடயவியல் சோதனை அதிகாரிகள் (SOCO) முதற்கட்ட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.