பயிர்ச்செய்கை பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லோரும் விவசாயிகள் தானா?

அரசாங்கம் என்ற ரீதியில் விவசாயிகளதும் பொது மக்களதும் நலனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம், இந்நிலையில் விவசாயிகளது ஆர்பாட்டங்களில் பங்குகொள்பவர்கள் அனைவரும் உண்மையிலேயே விவசாயிகள்தானா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்தார்.

கண்டி, கண்ணொறுவாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

விவசாயிகளது ஆர்பாட்டங்களில் ஈடுபடும் சில நபர்களது முகங்கள், ஏனைய ஆர்பாட்டங்களிலும் கண்ட முகங்களாக உள்ளன. அதாவது தீப்பந்தப் ஆர்பாட்டம், மீனவர் ஆர்பாட்டட்டங்கள் மற்றும் பல்வேறு போராட்டங்களிலும் அடிக்கடி காணப்படுபவர்களாக உள்ளனர். இதனால் இந்த விவசாயப் போராட்டங்களில் காணப்படும் அனைவரும் விவசாயிகள்தானா என்ற சந்தேகம் எழுந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அருகில் நடைபெறும் போராட்டங்களில் கூட இந்த நபர்களைக் காண முடிந்தது. அங்கேயே தரையில் அமர்ந்து விலங்குகளைப் போல சோற்றுப் பார்சல்களை உண்ணும் முறையையும் நாம் கண்டோம்.

அதுமட்டுமன்றி, இவர்கள் காலிமுகத்திடல் இடம் பெற்ற போராட்டத்திலும் இருந்தார்கள். எனவே, இவர்கள் விவசாயிகளா, மீனவர்களா அல்லது வேறு யாருமா என்று எம்மால் நினைத்துப்பார்க்க முடியாமல் உள்ளது.

தற்போது நாம் அரசாங்கம் என்ற ரீதியில் நெல்லுக்கு நிலையான விலையொன்றை வழங்கியுள்ளோம். களஞ்சியசாலைகளில் உள்ள நெல் இருப்புகளை அகற்றிவிட்டு, இந்தச் சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

அரசாங்கம் என்ற ரீதியில் விவசாய மக்கள் மற்றும் சாதாரண மக்களின் நலனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம்.

இவ்வாறு பணிகளை முன்னெடுத்துச் செல்லும்போது சிறிய பிரச்சினைகள் சில எழுகின்றன. அவற்றை நாம் படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வருவோம். இரசாயனப் பசளை பயன்பாட்டை நீக்கியமை போன்ற பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.

இது மக்களின் அரசாங்கம். அதேபோல், இந்நாட்டு விவசாயத்திற்கு வனவிலங்குகளால் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குரங்குப் பிரச்சினைக்கு எப்படியும் தீர்வுகொண்டு வரப்பட வேண்டும். யார் என்ன கூறினாலும் நாம் அதனைச் செய்வோம்.

இந்த ஆராய்ச்சிகளை நாம் செயல்படுத்துவோம். உலகில் எந்தவொரு நாடும் குரங்குப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வைக் கண்டறியவில்லை. நாம் அது குறித்துக் கவனம் செலுத்தியுள்ளோம்.

பழைய உணவுப் பழக்க, கலாச்சாரத்தை மாற்றிவிட்டு, ஆரோக்கியமான உணவு முறைகளை நோக்கி நகர வேண்டும். இன்று பெருமளவிலான மக்கள் இந்த உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக தொற்றா நோய்களுக்கு உள்ளாகி அவதிப்படுகின்றனர் என்றார்.

 

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்