கடமையின் போது கொல்லப்பட்ட டொராண்டோ போலீஸ் அதிகாரியின் இறுதி ஊர்வலம்

இந்த மாத தொடக்கத்தில் கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட, அவசரப் பணிப் படையின் (ETF) 43 வயதுடைய உறுப்பினர் கான்ஸ்டபிள் மார்க் பினிசோட்டோவின் (Const. Marc Pinizzotto) இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.

ஆயிரக்கணக்கான டொராண்டோ போலீஸ் அதிகாரிகள், அவசர சேவைப் பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பினிசோட்டோவின் குடும்ப உறுப்பினர்கள் எடிபோகிக்கில் (Etobicoke) உள்ள டொராண்டோ காங்கிரஸ் மையத்தில் மதியம் 1 மணிக்கு நடைபெறும் இந்த இறுதி வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொராண்டோ போலீஸ் சேவையில் 18 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அதிகாரியான பினிசோட்டோ, கடந்த ஜூன் 11 ஆம் தேதி நோர்த் யார்க் (North York) பகுதியில் சோதனை வாரண்டுகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த மார்ச் மாதம் அமெரிக்க தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய ஒரு வாரண்டும் இதில் உள்ளடங்கும்.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 19 வயதுடைய நிக்கோலஸ் பென்னட் (Nicholas Bennett) என்ற சந்தேக நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் (First-degree murder) சுமத்தப்பட்டுள்ளது.

ETF இன் 64 ஆண்டுகால வரலாற்றில் அதன் உறுப்பினர் ஒருவர் கடமையின் போது கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த இறுதிச் சடங்கு நிகழ்வு பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தாலும், சிடிவி நியூஸ் (CTV News) மற்றும் சிபி24 (CP24) ஆகியவை இந்த ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன.

நேரடித் தகவல்களின் சுருக்கம் (Timeline of Events):

  • முற்பகல் 10:00 – இறுதி ஊர்வலம் ஆரம்பம்: பினிசோட்டோவின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேதம் தாங்கி வாகனம் (Hearse) தோர்ன்ஹில்லில் (Thornhill) உள்ள மலர்ச்சாாலையிலிருந்து புறப்பட்டு எடிபோகிக் நோக்கிச் செல்கிறது. இதன்காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இப் பெரணியை நெடுஞ்சாலை 407 (Highway 407) மேம்பாலங்களில் இருந்து பார்வையிடலாம்.

  • முற்பகல் 09:45 – ஆயிரக்கணக்கான அதிகாரிகள் அணிவகுப்பு: டொராண்டோ போலீசார் தெரிவிக்கையில், ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மார்ட்டின் குரோவ் வீதி வழியாக இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தை நோக்கி அணிவகுத்துச் சென்று, அஞ்சலி செலுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

  • முற்பகல் 09:30 – டொராண்டோ போலீஸ் நன்றி அறிவிப்பு: பினிசோட்டோவின் மறைவுக்குப் பொதுமக்கள் வழங்கிய ஆதரவிற்கும் இரங்கல்களுக்கும் டொராண்டோ போலீஸ் சேவை தங்களது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் நன்றி தெரிவிப்பதுடன், இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

  • முற்பகல் 08:30 – பினிசோட்டோ குடும்பப் படங்கள் பகிர்வு: பினிசோட்டோவின் மனைவி ஆண்ட்ரியா (Andrea) மற்றும் அவர்களின் 14 வயதுடைய இரட்டைப் பிள்ளைகளான டேனியலா மற்றும் டொமினிக் ஆகியோருடன் பினிசோட்டோ இருக்கும் புகைப்படங்களை அவரது குடும்பத்தினர் ஊடகங்களுடன் பகிர்ந்துள்ளனர்.

  • முற்பகல் 08:00 – வீதிகள் மூடல்: இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு மார்ட்டின் குரோவ் வீதி (Martin Grove Road), பெல்ஃபீல்ட் வீதி (Belfield Road) உள்ளிட்ட பல முக்கிய போக்குவரத்து வீதிகள் மற்றும் நெடுஞ்சாலை சரிவுகள் (Ramps) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மதியம் 1 மணிக்கு இறுதிச் சடங்கு தொடங்கியதும் இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்