நெல் மூட்டைகள் சேதம்! தவெக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகள், ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் முறையாகப் பாதுகாக்கப்படாமல் மழைநீரில் நனைந்து வீணாவது தொடர்கதையாகி உள்ளது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் நெல் மணிகள் எப்படி வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணானதோ, அதேபோல் மாற்றம் கொண்டு வருவோம் என்று ஆட்சிக்கு வந்த தற்போதைய தவெக ஆட்சியிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் நெல் மணிகள் வீணாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெல் கொள்முதல் கிடங்குகளுக்குப் போதிய குடோன்கள் இல்லை என்பதும், நெல் மூட்டைகளைப் பாதுகாக்கப் போதுமான தார்ப்பாய்கள் கூட இல்லை என்பதும் அரசின் அவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீபெரும்புதூர், ராமானுஜபுரம், விருதுநகர் மற்றும் ராணிப்பேட்டை போன்ற இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பாதுகாப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வீணாகியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பாமல் பல மாதங்களாகத் தேக்கி வைத்திருப்பதும், போதிய தார்ப்பாய்கள் வழங்காததுமே இந்தத் துயரத்திற்கு முக்கிய காரணம் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். விளைவித்த நெல் மழையில் வீணானதால், அவற்றின் தரம் குறைந்து விற்பனை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கொள்முதல் நிலைய அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்படுவதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டாலும், வெறும் பார்வையால் மட்டும் விவசாயிகளின் குறைகள் தீர்ந்துவிடாது. எனவே, அனைத்து திறந்தவெளி கொள்முதல் நிலையங்களிலும் நிரந்தர குடோன்கள் அமைக்க உடனடி நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். குடோன்கள் கட்டி முடிக்கப்படும் வரை போதிய தார்ப்பாய்களை கொள்முதல் செய்து நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அரசின் நிதிநிலையைக் காரணம் காட்டி குடோன் அமைக்கும் பணிகளைத் தள்ளிப்போடக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி இந்த அரசை வலியுறுத்தியுள்ளார்.

#EPS #PaddyDamage #EdappadiPalaniswami #TvkGovernment #FarmersWelfare #TamilNaduAgriculture #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #Agriculture #TamilNaduPolitics #RainDamage #StorageFacilities #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #Economy2026 #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #FoodSecurity #AgriculturalLoss #PublicRepresentation #GovernmentAccountability #CropLoss

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது