மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தற்போது அந்த வைத்தியசாலை மாகாண சபை கட்டமைப்புக்குள் இயங்கி வருகிறது. புற்றுநோய் வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்தும், தாதியர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்தும் வழங்கப்படுகின்றனர். இதனால் இரண்டு வைத்தியசாலைகளுக்கும் ஆளணி பற்றாக்குறை நிலவுகிறது.

இந்நிலையில் வைத்தியர் சிறீபவானந்தராஜா, ஆதார வைத்தியசாலையையும் புற்றுநோய் வைத்தியசாலையையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று யோசனை முன்வைத்தார். தேசிய மக்கள் சக்தி தவிர்த்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் புற்றுநோய் பிரிவை விசேட பிரிவாக அங்கீகரிக்க ஒப்புக்கொண்டனர்; ஆனால் ஆதார வைத்தியசாலையை மாகாண சபையிலேயே வைக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

இருப்பினும் தெல்லிப்பழை பிரதேச கூட்டத்தில் சிறீபவானந்தராஜா அனைத்தையும் மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இதனை பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா இராமநாதன் கடுமையாக எதிர்த்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியதாவது: அரசாங்கம் திட்டமிட்டே மாகாண சபைக்கு நிதி வழங்காமல் அதன் கட்டமைப்புகளை செயலிழக்கச் செய்கிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு போதுமான ஆளணியும் நிதியும் இல்லாமல் நடத்தப்படுகிறது. அங்கு இன்றும் நோயாளிகள் தரையில் படுத்திருக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதாக வாக்குறுதி அளித்தார்; ஆனால் தற்போதைய அரசு அந்த வளங்களை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு திருப்பிவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெறும் பெரும்பாலான அபிவிருத்திகள் புலம்பெயர் தமிழர்களின் நன்கொடைகளால்தான் நடக்கின்றன; அரசு போதுமான நிதி வழங்கவில்லை.

ஆதார வைத்தியசாலையை மத்திய அரசுக்கு மாற்றுவது நோயாளிகளுக்கான தீர்வல்ல; மாறாக மாகாணத்தின் கட்டமைப்புகளை முடக்கி மக்களை ஏமாற்றுவதற்கான அணுகுமுறையே என்று அவர் தெரிவித்தார்.

உடனடியாக செய்ய வேண்டியது என்னவென்றால், புற்றுநோய் பிரிவை விசேட அலகாக அங்கீகரித்து தேவையான வளங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும்; மாகாண சபைக்கு கீழுள்ள பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் போதுமான நிதி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

725147385_963435430006083_3681308214476639100_n

அரச படைகளுக்கு கணி வழங்க முயற்சி – எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் குரலை ஒடுக்க அழைக்கப்பட்ட பொலிசார் – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பரபரப்பு!

June 19, 2026

அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து

us

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

June 19, 2026

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின்

Cont

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

June 19, 2026

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி

ca

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

June 19, 2026

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா

727322968_2861356607530672_2715840258650210241_n

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

June 19, 2026

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land

ravikaran11

வட்டுவாகால் விகாரைக்குக் கீழும் மனித புதைகுழி — துரைராசா ரவிகரன்

June 19, 2026

வட்டுவாகல் விகாரைக்கு கீழும் மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட

725787214_3157095731150321_7205787586037390907_n

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி

June 19, 2026

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை