ஜி7 உச்சிமாநாட்டில் பரபரப்பு: சீன ஈவி (EV) இறக்குமதி உச்சவரம்பு குறித்து கார்னி – டிரம்ப் ரகசியமாக பேசியது அம்பலம்!

சீன மின்சார வாகனங்களின் (EV) இறக்குமதி தொடர்பான கனடாவின் கொள்கை குறித்து, அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் விவாதித்த ரகசிய உரையாடல் ஜி7 உச்சிமாநாட்டில் மைக் ஆன் செய்யப்படிருந்ததால் (Hot Mic) தற்செயலாக கசிந்து பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சிமாநாட்டின் மதிய உணவு அமர்வுக்கு முன்னதாக இரு தலைவர்களும் பேசிக்கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனடிய சந்தைக்குள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்களை மட்டுமே அனுமதிக்கும் கனடாவின் ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்பிடம் பிரதமர் மார்க் கார்னி விளக்குவது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.

கனடா, சீன மின்சார வாகனங்களின் இறக்குமதியை ஆண்டுக்கு 49,000 வாகனங்களாகக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும், இது கனடிய வாகனச் சந்தையின் ஒட்டுமொத்த அளவில் மூன்று சதவீதத்திற்கும் குறைவானது என்றும் டிரம்ப்பிடம் கார்னி தெரிவித்துள்ளார்.

“நீங்கள் இதை நிச்சயம் விரும்புவீர்கள் என்று நான் நினைத்தேன்,” என கார்னி அமெரிக்க அதிபரிடம் கூற, அதற்கு டிரம்ப், “அது நல்லது, நான் அதை விரும்புகிறேன்,” என்று பதிலளித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் கேனோலா வித்து (Canola seed) உள்ளிட்ட சில முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை சீனா குறைப்பதற்குப் பகரமாக, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீன மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரியைக் கனடா குறைக்கும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மார்க் கார்னி அறிவித்திருந்தார்.

முக்கிய நட்பு நாடுகளுடனான உறவுகளைப் பேணிக்கொண்டு, அதே நேரத்தில் பொருளாதாரப் போட்டி குறித்த கவலைகளுக்கு மத்தியில் கனடா தனது வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த முயன்று வரும் வேளையில் இந்த உரையாடல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gun-Site

திருகோணமலை கடற்படை முகாமில் இயங்கிய இகசிய வதை  முகாம் மூடப்பட்டது

June 17, 2026

திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் அமைந்துள்ள “கன் சைட்” (Gun Site) என்று அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய வதை முகாமை

2EHAIAM3OVHVXNJYZBQRV2GTFI

அச்ச உணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்கள்’: குறுஞ்செய்தி செயலிகள் மூலம் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளுக்கு இளைஞர்கள் வாடகைக்கு அமர்த்தப்படுவதாக டொராண்டோ காவல்துறை தகவல்

June 17, 2026

யூத வழிபாட்டுத் தலங்கள் (Synagogues), யூதப் பள்ளிகள் மற்றும் அமெரிக்க தூதரக அலுவலகம் (U.S. Consulate) உள்ளிட்ட பல்வேறு இலக்குகள்

6A3YHS2D7NBNNJ4N52F4UWES7M

டொராண்டோவின் கிழக்கு பகுதியில் காரணமின்றி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம்: சந்தேக நபரைக் தேடும் காவல்துறை

June 17, 2026

டொராண்டோவின் கிழக்கு பகுதியில் கடந்த வாரம் காரணமின்றி நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்

acc

விபத்தில் அளவெட்டி இளைஞன் பலி

June 17, 2026

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர் தொழிலுக்கு சென்று மீண்டும்

aga

சம்மாந்துறையில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் – தங்கத்தைத் தேடி அகழ்வுப் பணி

June 17, 2026

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை(17) அகழ்வுப் பணி

Education

கல்வி அமைச்சிடம் அவசர கோரிக்கை

June 17, 2026

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத்

arre

பண மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது

June 17, 2026

லங்கைக் குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு ஒன்றில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி,

jaffna GH

யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் தொடர்பில் முறைப்பாடு?

June 17, 2026

யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற

saji

அரசு அனைவரையும் ஏமாற்றிவிட்டது – சஜித் சாடல்

June 17, 2026

பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்று

download (9)

எட்மன்டனில் முன்னாள் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சிறுவர் ஆபாசக் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ளார்

June 17, 2026

எட்மன்டன் (Edmonton) நகரின் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர், கனடாவுக்குத் திரும்பிய பின்னர் கைது செய்யப்பட்டு, சிறுவர்

724287458_122297856890194641_3241864132645503016_n

உயிர்கொல்லி கூடாரத் தீ விபத்தைத் தொடர்ந்து கொலைக் குற்றச்சாட்டில் தேடப்படும் சந்தேகநபரை சட்பரி பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்

June 17, 2026

கிரேட்டர் சட்பரி (Greater Sudbury) பொலிஸார், ஒரு நபர் உயிரிழப்பதற்குக் காரணமான கூடாரத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு

724072972_122297785646194641_4151210961746668221_n

சஸ்காட்செவனில் கைதி ஒருவர் தவறுதலாக விடுவிப்பு: சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

June 17, 2026

நிர்வாகக் குறைபாடு காரணமாக பிரின்ஸ் ஆல்பர்ட் சீர்திருத்த மையத்திலிருந்து (Prince Albert Correctional Centre) தவறுதலாக விடுவிக்கப்பட்ட 30 வயதுடைய