வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.அச்சுதனுடன் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் ஆராய்ந்திருந்தோம். அதற்கமைவாக நாம் சில துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட விளையாட்டுத்துறையின் அபிவிருத்தி சார்ந்த தேவைகளை விளையாட்டு உத்தியோகத்தர்கள் முறையாக அடையாளங்காண வேண்டும்.

அத்தேவைகளை மாவட்ட செயலாளர்கள் ஊடாக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்வைப்பதன் மூலம் எமக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மாகாணத்துக்கான மிகப் பெரிய திட்டங்களை மாகாண விளையாட்டுத் திணைக்களம் தயாரித்து, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று, கேள்விப்பத்திரங்கள் மூலம் ஒப்பந்தங்களை வழங்கிய பின்னரே அதற்கான நிதியை அவர்கள் விடுவிப்பார்கள்.

எனினும், இந்த ஆண்டுக்குள் மிகப் பெரிய திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான கால அவகாசம் குறைவாகக் காணப்படுவதால், நடப்பு ஆண்டுக்குள் நிறைவேற்றக்கூடிய சாத்தியமான திட்டங்களை மாத்திரம் துரிதமாக முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணத்தில் விளையாட்டுப் பயிற்சிகளை முன்னெடுக்கும் பாடசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களின் பட்டியல் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாவட்ட செயலாளர்களுக்கு முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பொருத்தமான காணி கோரப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு மைதானத்துக்கான காணி அடையாளங்காணப்பட்டு, அதற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தனது கருத்தில், மாவட்டத்தில் பொருத்தமான அரச காணியை அடையாளம் காண்பதில் நடைமுறையிலுள்ள சிக்கல்களைத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், விளையாட்டுக் கழகங்களுக்கு உதவிகளை வழங்குவதற்குக் கழகங்களின் மைதானக் காணி உரிமங்களில் சில சட்டச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, மன்னார் மாவட்டத்திலிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மன்னார் மாவட்ட செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். விளையாட்டுத்துறை மேம்பாடு சார்ந்த இந்தச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளை ஆளுநர் அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர்கள், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் மேலதிக மாவட்ட செயலாளர்கள், மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

1200-675-27270261-thumbnail-16x9-ramesh

“பெற்ற மகனையே முறையாக வளர்க்காத மு.க. ஸ்டாலின், கட்சியை ஒழுங்காக நடத்துவார் என எதிர்பார்க்க முடியாது!” – அமைச்சர் ரமேஷ் சாடல்

September 14, 2026

திருச்சி: ஆர்ப்பாட்டங்களில் திமுகவினர் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதே அக்கட்சியின் டி.என்.ஏ (DNA) என்றும், முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ மு.க. ஸ்டாலின்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

“அஜித் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!” – அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி

September 14, 2026

தூத்துக்குடி: லண்டனில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் சந்திப்பு குறித்தும், சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் தொடக்க விழா

1200-675-25470070-thumbnail-16x9-admk-aspera

“இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்!” – அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

September 14, 2026

வேலூர்: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நேர்மையான முறையில் செயல்பட்டு வருவதாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடன் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அவர்

tvk-bus-2

சேலத்தில் தவெக கொடி நிறத்தில் புதிய அரசுப் பேருந்துகள்: போக்குவரத்துத்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 14, 2026

சேலம்: சேலம் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசுப் பேருந்துகளுக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி

HSJq4ica8AAcl1E

அஜித் – விஜய் சந்திப்பு: தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் இங்கிலாந்தில் நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார்

27628648_anand

“தவெகவில் இணைய ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை!” – மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளர் மரகதம் குமரவேல் விளக்கம்

September 14, 2026

மதுராந்தகம்: தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலின்

vinayagar (1)

ரூ. 25 லட்ச மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சி ஏலேல சிங்க விநாயகர்!

September 14, 2026

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய

elmore

செம்மணி மனித புதைகுழி அகழ்வை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – நம்பகதன்மை மிக்க விசாரணை அவசியம் -பிரிட்டன்

September 14, 2026

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து சர்வதேசதராதரத்திலான நம்பகதன்மை மிக்க வெளிப்படையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என இலங்கையிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாக பிரிட்டன்

Shiranthi-Rajapaksa 1

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி துஷ்பிரயோகம்: சிறாந்தி ராஜபக்ஷவிடம் எஃப்பிஐடி விசாரணை நடத்த தீர்மானம்

September 14, 2026

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டீ ஸ்கேனர் (CT scanner) இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய

Namal-750x422

விமானங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி – நாமல் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

September 14, 2026

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் பொதுஜனபெரமுன

202606093819488

“எந்தத் துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்ட விளக்கம்

September 14, 2026

திருநெல்வேலி: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், துண்டுச் சீட்டு மூலம் வந்த உத்தரவுக்கே சபாநாயகர் அடிபணிந்தார் என்ற

srilanka un peace keeping

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்புவதற்கு முன்னர் அவர்களின் கடந்காலங்கள் குறித்து நன்கு ஆராய்ந்தோம் – இராணுவ பேச்சாளர்

September 14, 2026

ஹைட்டி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இயங்கும் வன்முறைக் கும்பல் தடுப்புப் படையில் (GSF) இலங்கை அமைதி காக்கும்