இடை நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் ஆரம்பம்

பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் மறுபடி தொடங்கப்பட்ட நாளில் இருந்து 30 மாதங்களுக்குள் அதனை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாடா அகியோ ஆகியோருக்கு இடையில் நேற்று (12) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) பிரதிநிதிகள் குழுவொன்றும் கலந்துகொண்டிருந்தது.

இத்திட்டத்திற்கான கடன் தொகை மற்றும் ஒப்பந்த மதிப்பு தொடர்பான அனுமதிகளை விரைவுபடுத்துவதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்ததுடன், அந்த நடைமுறைகள் பூர்த்தியானதும் வரும் நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முடியும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கிறது.

இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகள் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் 75 பில்லியன் யென் கடன் உதவி வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதன் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதற்கான கொள்முதல் செயல்முறைகள் மீண்டும் தொடங்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் ஏலக் கோரல்கள் நிறைவு செய்யப்பட்டு, தற்போது உரிய ஒப்பந்தக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் இறுதி வாரத்திற்கு இத்திட்டம் வந்துள்ளது.

அதேபோல், இலங்கை அரசாங்கம், ஜப்பானிய அரசாங்கம் மற்றும் JICA நிறுவனத்துடன் நடத்திய பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பகத்தன்மையின் அடிப்படையில், இத்திட்டத்தை முடிப்பதற்குத் தேவையான கடன் விநியோகத்தை வழங்க ஜப்பானிய தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்குத் தேவையான கடன் தொகை குறித்து நிதி அமைச்சுடன் விரைவில் கலந்துரையாடி ஒப்புதலைப் பெற அமைச்சர் இங்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது JICA பிரதிநிதிகள் குழு, முதற்கட்டமாக கடன் தொகையை உறுதிசெய்து கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்றும், இரண்டாம் கட்டமாக கலந்துரையாடப்பட்ட விலையின் அடிப்படையில் ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
கடும் காற்று; அச்சுவேலி தீர்த்தங்குளத்தில் தீ பரவல்

யாழ்ப்பாணம், அச்சுவேலி தீர்த்தங்குளம் (வல்லை களப்பு) பகுதியில் நேற்று (12) இரவு கடும் காற்று காரணமாக பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

யாரோ ஒருவர் குப்பைகளுக்கு வைத்த தீ, காற்றின் வேகம் காரணமாகக் களப்பு பகுதி முழுவதும் பரவி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பலத்த காற்று வீசியதால், தீ வேகமாகப் பரவி பல ஏக்கர் புற்தரைகள் எரிந்து சாம்பலாகின. அத்துடன், சிறிய உயிரினங்களின் வாழ்விடமாக விளங்கும் இக்களப்பு பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் அச்சுவேலி பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். அதனையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ முற்றாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Selvam

சமஸ்டி சுயாட்சியே வடகிழக்கு அரசியலுக்கு தீர்வு – ரெலோவின் தேசிய மாநாட்டில் பிரகடனம்

June 15, 2026

தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் பிரதான பலமாக விளங்குகின்ற புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கிணைத்து

Chamara_Sampath_1200x675px_06_08_25

அரசுக்கு எதிராக 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன – சாமர சம்பத் தசநாயக்க!

June 15, 2026

அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இந்நாட்டின் தற்போது எம்முடன் 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று ஸ்ரீ லங்கா

easter bomb

தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள் ; சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும் – சண்முகம் குகதாசன்

June 15, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது மனிதாபிமானமற்ற செயல். தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். இதை செய்த சூத்திரதாரிகள்

725006167_122271192422059693_1707214849349142602_n

காணிகளை விடுவிக்ககோரி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டமயிலிட்டி மக்கள் -ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு

June 15, 2026

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்,

Ranil

இலங்கையின் பொருளாதாரம் விரைவில் முற்றாக வீழ்ச்சியடையும்”: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

June 15, 2026

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டதுடன், இன்னும் சில காலத்திற்குள் அது முற்றாக முடங்குவதை (Complete crash) காணக்கூடியதாக

Chilaw-Hospital

சிலாபம் மருத்துவமனையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: இருவர் காயம், சந்தேகநபர்கள் கைது

June 15, 2026

சிலாபம்: சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையில் (Chilaw District General Hospital) நேற்றிரவு (14) இருவர் மேற்கொண்ட தாக்குதலில், அங்கு

722205425_2516904032157267_6855962867046714642_n

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பை வலியுறுத்தி போராட்டம்!

June 15, 2026

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று காலை யாழ்

Sarath

இன்று இருப்பது ஒரு கார்ட்டூன் எதிர்க்கட்சி”: மார்ஷல்சரத் பொன்சேகா கருத்து!

June 15, 2026

ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளுக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்கி வரும் தற்போதைய அரசாங்கத்திற்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்குவதாகப் மார்ஷல் சரத் பொன்சேகாகுறிப்பிட்டுள்ளார்.

dead'

புலத்சிங்களவில் உள்ள ஆடைவிற்பனை நிலையத்திற்குள் தம்பதியினர் சடலங்களாக மீட்பு!

June 15, 2026

புலத்சிங்கள: களுத்துறை மாவட்டம், புலத்சிங்கள பகுதியில் உள்ள ஆடைவிற்பனை நிலையம் (Clothing store) ஒன்றிற்குள் கணவன் மற்றும் மனைவி ஆகிய

suresh11

சுரேஷ் சல்லேயை தினமும் சந்திக்க சட்டத்தரணிக்கு சிஐடி மறுப்பு: குடும்பத்தினருக்கு அனுமதி!

June 15, 2026

கொழும்பு: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டிருந்த போது முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தற்போது கொழும்பு தேசிய

722205477_122297438792194641_4474599319675497240_n

ரொறன்ரோ டென்போர்த் பகுதியில் தொடர் தாக்குதல்: நபர் மீது 12 குற்றச்சாட்டுகள் — பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பொலிஸார்

June 15, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள கொக்ஸ்வெல் அவென்யூ (Coxwell Avenue) மற்றும் டென்போர்த் அவென்யூ (Danforth Avenue) சந்திப்புப்

wi

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை

June 15, 2026

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்