டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐ.நா. சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதாபிமானத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு!

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் நிறைவு விழா, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே ஆகியோரின் தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே, “வலுவான அரசியல் தலைமைத்துவம் மற்றும் அனர்த்த நிலைமையினை விரைவாக முகாமைத்துவம் செய்தல் ஆகியவை காரணமாகவே, டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான நிவாரணத் திட்டத்தை இலங்கையில் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிந்தது” எனச் சுட்டிக்காட்டினார்.

மனிதாபிமானத் திட்டம்

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, “வலுவான தேசிய தலைமைத்துவம் மற்றும் பயனுள்ள கூட்டாண்மை மூலம், நெருக்கடியான சூழ்நிலையிலும் மக்களுக்கு மிகவும் நியாயமான முறையிலும் செயற்திறனாகவும் நிவாரணம் வழங்க முடியும் என்பதை இலங்கை நிரூபித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை விரைவாக வழங்கிய துல்லியமான தரவுகள் மற்றும் மதிப்பீடுகள் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு முக்கியமானதாக அமைந்தன.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்காக பன்முகப்படுத்தப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தேசிய, மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பை மேலும் விரிவுபடுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது” எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்நெருக்கடி காலத்தில் தாராளமாக உதவிய பல்வேறு நாடுகளுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அரச நிறுவனங்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டோருக்கு தலா 27,000 ரூபா கொடுப்பனவு ஐக்கிய நாடுகள் சபையின் “டித்வா மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின்” கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்காக 35.4 மில்லியன் டொலர்களைச் சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தொகையில் 75 சதவீதத்திற்கும் அதிகமான நிவாரண உதவிகள் இந்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்காகப் பிரதேச செயலகங்கள் ஊடாக 27,000 ரூபா கொடுப்பனவும், தற்காலிக வீடுகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.