கடந்த ஏப்ரல் மாதம் லேம்ப்டன் கல்லூரி (Lambton College) அருகே நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டு வந்த லண்டனைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஊடோம் ரிச்சர்ட் பன் (Oudom Richard Bun) என்ற அந்த நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மேலும் மூன்று சந்தேக நபர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போதைக்கு இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.