இந்த வார இறுதியில் கவார்த்தா லேக்ஸ் (Kawartha Lakes) பகுதியில் பயணிகள் கார் ஒன்றும், நான்கு மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP), உள்ளூர் அவசர மருத்துவ சேவை (EMS) மற்றும் தீயணைப்புப் படையினர் விடுத்த செய்திக்குறிப்பின்படி, ஜூன் 6 சனிக்கிழமை மாலை 6 மணியளவில், ஒமேமி (Omemee) பகுதியின் ஹைவே 7 மற்றும் நியூ ஹைட்ஸ் சாலை சந்திப்பில் நேரிட்ட இந்த பயங்கர விபத்து குறித்து தகவல் கிடைத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டி, படுகாயங்களுடன் ஹெலிகாப்டர் மூலம் டொராண்டோ அதிர்ச்சி சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சட்பரியைச் சேர்ந்த 30 வயதுடைய மூன்றாவது மோட்டார் சைக்கிள் ஓட்டி, உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் டொராண்டோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சட்பரியைச் சேர்ந்த 36 வயதுடைய நான்காவது மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
-
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; இதுகுறித்த தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பான ஏதேனும் தகவல் அல்லது டேஷ்கேம் (Dashcam) வீடியோ பதிவுகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக கவார்த்தா லேக்ஸ் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.