முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருந்தால் நாணய நிதியத்தால் ஏற்படும் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டிருப்பார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருந்தால் நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டிருப்பார். எனவே நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாயின், ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சியின் அனுபவமிக்க அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய பல்துறைசார் நிபுணத்துவக் குழுவொன்றை அரசாங்கம் உடனடியாக நியமிக்க வேண்டும் என சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் எரிபொருள்; விலையைக் குறைத்துள்ளன. ஆனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு எரிபொருள்; வாங்கியமை, தரம் குறைந்த நிலக்கரி மற்றும் சாம்பல் நிறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமை போன்ற கின்னஸ் சாதனைகள் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையே சேரும்.

பெப்ரவரி 28 முதல் மே 31 வரையிலான காலப்பகுதியில், உலகிலேயே மிக அதிக சதவீதத்தில் டீசல் மற்றும் பெற்றோல் விலையை அதிகரித்திருப்பது இலங்கை அரசாங்கமாகும். இதன் மூலம் டீசல் 13.9 சதவீதத்தாலும், பெற்றோல் 127.6 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்தியுள்ளன. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்திலுள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட எரிபொருள்; விலையைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு அதன் பலனை வழங்கியுள்ளன.

ஈரான் – இஸ்ரேல் யுத்தம் காரணமாகவே எரிபொருள்விலை அதிகரித்தது என்று அரசாங்கம் கூறும் காரணம் முற்றிலும் பொய்யானதாகும். தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததால் ஏற்பட்ட சுமார் 100 பில்லியன் டொலர் இழப்பு, அதிக விலைக்கு எரிபொருள்; வாங்கியதால் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மின்வெட்டை முகாமைத்துவம் செய்ய முயன்றதால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணங்களாகும்.

உலக சந்தையில் மசகு எரிபொருள்; விலை குறைந்தாலும் உள்நாட்டில் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை இதனாலேயே ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குத் தேவையான எரிபொருளை மாத்திரமே எம்மால் சேமிக்க முடியும் என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறினார். ஆனால் அதற்கு முந்தைய வாரங்களில் உலக சந்தையில் மசகு எரிபொருள்; விலை குறைவாக இருந்த போது ஏன் விலையைக் குறைக்கவில்லை? எனவே, ஜனாதிபதிக்கோ அல்லது மின்சக்தி அமைச்சருக்கோ எரிபொருள்விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து எந்தவொரு புரிதலும் இல்லை.

தற்போது அரசாங்கம் சில நிறுவனங்களின் மாஃபியாக்களிடம் சிக்கியுள்ளதுடன், அதிக விலைக்கு எரிபொருள்; வாங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது. காஞ்சன விஜேசேகர அமைச்சராக இருந்தபோது நிறுவனங்களின் தரகுப் பணம் அவரது சட்டைப் பைகளுக்குள் செல்வதாக ஜனாதிபதி கூறினார். தற்போது அந்த சட்டவிரோத இலாபம் யாருடைய சட்டைப் பைக்கு அல்லது எந்தக் கணக்கிற்குச் செல்கிறது என்பதை ஜனாதிபதி நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

அடுத்த கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் விலை மற்றும் வரிகளை அதிகரிக்க உடன்பாட்டை தெரிவித்து, சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜனாதிபதியும் மத்திய வங்கி ஆளுநரும் கடிதம் அனுப்பியுள்ளனர். இதன் மூலம் அரசாங்கம் நாட்டை சர்வதேச நாணய நிதியத்திடம் காட்டிக்கொடுத்துள்ளது. நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சரியான பார்வையான திறமையோ இந்த அரசாங்கத்துக்கு இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் சகல நிபந்தனைகளுக்கும் இணக்கம் தெரிவித்திருக்க மாட்டார். நிலைமையைச் சரியாகக் கையாண்டிருப்பார். மத்திய வங்கி ஆளுநரின் கூற்றுப்படி, பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாம் தற்போது பாரியதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், அரசாங்கம் அதனை முகாமைத்துவம் செய்வதற்கான முன்னாயத்தங்களை இன்னும் மேற்கொள்ளவில்லை.

அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் எதுவும் இல்லை. அன்றாட நிலைமைக்கு ஏற்பவே தற்காலிகமாகச் செயற்படுகின்றனர். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி இதற்குப் பொருத்தமான ஒரு குழுவை நியமிக்க வேண்டும். அக்குழுவில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக, எதிர்க்கட்சியில் இருக்கும் அனுபவமிக்க அரசியல் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு நாட்டுக்கு பொருத்தமான வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளைக் கையாள வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த