மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று(26.05.2026) இரவு ஏற்பட்ட திடீர் தீ பரவலால் குறித்த வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
இதனால் பிரதான வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் முயற்சிகளின் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தினால் வர்த்தக நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.