ரொட்டவெவ – புளியங்குளம் வயல் காணிகளை மீட்டுத் தருமாறு விவசாயிகள் அவசர கோரிக்கை!

திருகோணமலை – மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணிகளை தமக்கு மீண்டும் மீட்டுத் தருமாறு அந்தப் பகுதி விவசாயிகள் அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

​தமது வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, கவலை கலந்த விசனம் வெளியிட்டுள்ளனர்.​

​இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாய சங்கத்தினர் கருத்துத் தெரிவிக்கையில்,​எமது மூதாதையர்கள் கடந்த 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டு வரை இந்தப் புளியங்குளம் வயல் காணிகளில் மிகச் செழிப்பான முறையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும், 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக, நாம் எமது சொந்த வீடுகளையும், விளைநிலங்களையும் கைவிட்டு, உயிராபத்துக்களுக்கு மத்தியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தஞ்சம் புக வேண்டியேற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.​

நீண்ட காலத்திற்குப் பின்னரே தாம் மீண்டும் தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பியதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.​

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், ‘மகநெகும’ மற்றும் ‘கமநெகும’ ஆகிய திட்டங்களின் கீழ் இந்தப் பகுதியிலுள்ள சின்ன புளியங்குளம் மற்றும் பெரிய புளியங்குளம் ஆகிய இரண்டு குளங்களும் பல இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

குளங்கள் புனரமைக்கப்பட்ட போதிலும், அதன்கீழ் உள்ள விவசாய நிலங்களைப் பயன்படுத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் சாடுகின்றனர்.​

தமது கிராமத்தை சூழவுள்ள குபுக்வெவ – கெமராவ மற்றும் மெதவெவ போன்ற பகுதிகளில் ஏனைய விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆனால், பாரம்பரியமாக தமக்குச் சொந்தமான புளியங்குளம் பகுதியிலுள்ள விவசாயக் காணிகள் மட்டும் இன்னும் விடுவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.​

எமது பாரம்பரியக் காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக மீண்டும் விடுவித்துத் தருமாறு பல அரசியல்வாதிகளிடமும், உயர் அரச அதிகாரிகளிடமும் நாம் நேரில் சென்று பலமுறை கோரிக்கை விடுத்தோம்.ஆனால், இன்றுவரை எமது நியாயமான கோரிக்கைக்கு எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை.

வெறும் வாக்குறுதிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.​

எனவே, தற்போதைய அரசாங்கமாவது தலையிட்டு, பல வருடங்களாக முடங்கிக் கிடக்கும் ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணிகளை உடனடியாக மீட்டெடுத்து, தமது விவசாய நடவடிக்கைகளைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் என அந்தப் பகுதி தமிழ், முஸ்லிம் விவசாயிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

462LJO3DBFF6NPN2IULEMMDPRI

வர்த்தகப் போர்: வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஒன்டாரியோவில் கவலையும் புதிய வாய்ப்புகளும்

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான 11-ஆம் மணி நேர வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, கனடியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர்

IF6WVUL6AZHXNAAMDZ5URB7V34

வர்த்தக ஒப்பந்த முறிவுக்கு மத்தியிலும் கனடா-அமெரிக்க கூட்டுறவை போற்றும் நியூ பிரன்சுவிக் விழா

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளின் நீண்டகால நட்புறவை நினைவுகூரும்

trump june 26

தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக மோதலுக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியின் (Lake Ontario) பெயரை மாற்றப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்

August 25, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒன்டாரியோ ஏரி’யின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க

vijay-tributes-vijayakanth-2nd-anniversary

“விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” – முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி

August 25, 2026

சென்னை: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழஞ்சலி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்

Thirumavalavan-press-meet-edi-2

“புதிய விமான நிலையம் தேவைதான்; ஆனால்…” – வி.சி.கே. தலைவர் திருமாவளவன் கருத்து!

August 25, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆண்டிற்கு 3

maalai-malar_2026-08-25_i3uyw1ww_deva

விஜய்யைச் சந்தித்து த.வெ.க.வில் இணையும் பிரபல மலையாள நடிகர்: கேரளாவில் முக்கியப் பொறுப்பு?

August 25, 2026

சென்னை: தென்மாநிலங்களில் த.வெ.க.வை விரிவுபடுத்த திட்டம் தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கேரளா,

1200-675-27424292-thumbnail-16x9-min-aadhav-new

“ஜி-ஸ்கொயரைப் பற்றி பேசினால் தி.மு.க.வினர் ஏன் பதற்றப்படுகிறார்கள்?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

August 25, 2026

சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான 7-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இதில்

dailythanthi_2026-08-25_zq03klgx_CHENNAI-15

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: முதலமைச்சர் விஜய்க்கு நேரில் நன்றி தெரிவித்த விவசாயிகள்

August 25, 2026

சென்னை: முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பரந்தூர்

1200-675-27478432-thumbnail-16x9-sdew

பரந்தூர் விமான நிலைய திட்ட ரத்து விவகாரம்: பேரவையில் த.வெ.க – தி.மு.க – அ.தி.மு.க வார்த்தை மோதல்!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்

HQjRRN4bIAAIIXR

250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

August 25, 2026

சென்னை: புதிய பேருந்துகள் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்

images - 2026-08-25T191417.284

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குடும்பத்தினரிடம் சிபிஐ தீவிர விசாரணை!

August 25, 2026

சென்னை: வழக்கு பின்னணியும் காவல்துறையின் நடவடிக்கையும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம்

hindutamil-prod_2026-08-25_vhoxai89_BeFunky-collage-2026-08-25T141334.025

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்டதா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கர்நாடக அரசிடம் தமிழ்நாடு அரசு