சீனாவின் வடக்கு மாகாணமான ஷான்சியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, மேலும் 38 தொழிலாளர்கள் அந்த சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். சுரங்கத்தினுள் பரவியுள்ள நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாக, உள்ளே சிக்கியிருப்பவர்களின் ஆரோக்கிய நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து நேர்ந்தபோது, குறித்த சுரங்கத்திற்குள் 247 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 201 பேரை சீன மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.