யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கருணநாதன் இளங்குமரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (22.05.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது தலைமையுரையாற்றிய கருணநாதன் இளங்குமரன், போக்குவரத்துத் துறை மிகவும் இன்றி அமையாததுடன் இங்கு நேரமுகாமைத்தவம் முக்கியமானது எனவும், போக்குவரத்தில் தடங்கல்கள் காலதாமதங்கள் ஏற்பட்டால் திட்டமிடப்பட்டவை அனைத்தும் பின்னோக்கி நகரும் எனவும், இதனால் சீரான போக்குவரத்திற்கு வீதி அபிவிருத்தி முக்கியமானது எனத் தெரிவித்தார்.

மேலும், கடந்த வருடம் கிராமிய வீதிகளுக்கான 1000 மில்லியன் ரூபா மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்கான 2500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் நிகழ்ச்சித் திட்டங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசுசரிய – பாடசாலை பேருந்துச் சேவை, கெமி செரிய – கிராமிய இணைப்பு பேருந்து சேவை, நிசி செரிய – பின்னிரவு பேருந்து சேவை மற்றும் கடல்வழிப் போக்குவரத்து ஆகியன தொடர்பாக விரிவாக ஆராய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், ஒரு அபிவிருத்தி வேலையினை ஆரம்பிக்கும் போது நிதி ஒதுக்கீட்டுக்கு அமைய, பகுதியளவில் மேற்கொள்ளாமல் முழுமையாக நிறைவேற்றி முடிப்பதே ஆரோக்கியமானது எனவும், யாழ்ப்பாண மாவட்டமானது அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மையாக விளங்குகிறது எனவும், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட வேலைத் திட்டங்களை ஒன்றிணைந்து மாவட்டத்தின் அபிவிருத்திக்கு காத்தரமான பங்களிப்புக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி தொடர்பாகவும், 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம், கிராமிய பாலங்கள் அபிவிருத்தித் திட்டங்கள், கிராமிய வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்ற பிரதேசங்களை சீர்ப்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு – அனுமதிகளும் வழங்கப்பட்டன மேலும், குமுதினிப் படகு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர் இ.தயாளன், மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிறிவாகீசன், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவகுமாரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினார்கள்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது