கொங்கோவில் பரவி வரும் அரிய வகை எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை குறைந்தது 120 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு எபோலா நோய்ப் பாதிப்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அந்நாட்டில் தற்போதைய நோய் நிலைமை மிக வேகமாக மாறி வருவதாகவும், வரும் வாரங்களில் கூடுதல் பாதிப்புகள் கண்டறியப்படலாம் என்றும் அங்குள்ள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த கிழக்கு இத்தூரி (Ituri) மாகாணத்தில் மூன்று புதிய சிகிச்சை மையங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதே வேளை உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க நிபுணர்களை அனுப்பி வருகிறது.
வைரஸின் தொடக்க கால பரிசோதனைகள் தவறான வீரியத்தை (strain) அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டதால், இந்த நோய் பரவல் பல வாரங்களாகக் கண்டறியப்படாமல் போனதாக சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
“தொடக்க கால சோதனைகள் தவறான எபோலா வகையைத் தேடியதால், நமக்கு தவறான நெகட்டிவ் (false negatives) முடிவுகள் கிடைத்தன. இதனால் பல வாரங்கள் வீணாகிவிட்டன. இப்போது நாம் மிகவும் ஆபத்தான ஒரு நோய்க்கிருமிக்கு எதிராகப் போராடி வருகிறோம்,” என்று ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேத்யூ எம். கவானாக் (Matthew M Kavanagh) தெரிவித்துள்ளார்.