மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டிலும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கை செய்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மரணம் சம்பவித்த வீட்டிற்குள் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் ஊடாக நுழைய முடியும் என்ற போதிலும், சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்ததில் 2026ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதிக்கும் 2026ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநபர்கள் எவரும் அந்த வீட்டிற்குள் நுழையவில்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, இறந்துபோனவர் வசித்து வந்த வீட்டிலிருந்த சிசிடிவி உபகரணங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அந்த சிசிடிவி உபகரணங்களிலும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நீதவான் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பொலிஸார், மரணமடைந்தவர் வசித்து வந்த வீட்டிலும், மரணம் சம்பவித்த வீட்டிலும் இருந்த சிசிடிவி கெமராக்களில் காட்சிகள் பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

அதன்படி, அந்த சிசிடிவி கெமராக்களைப் பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளர் இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மரணமடைந்தவர் வசித்த வீடு மற்றும் மரணம் சம்பவித்த வீடு ஆகியவற்றின் சி.சி.டி.வி கெமரா கட்டமைப்புக்குரிய டி.வி.ஆர் இயந்திரங்களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து, அவற்றை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம்​சமர்ப்பித்து அறிக்கை கோருவதற்கு அனுமதி வழங்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மரணம் சம்பவித்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்து வகைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை கோர நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்டவற்றில் அடையாளம் தெரியாத இரு வேறு வகையான மருந்து மாத்திரைகள் இருந்ததாகவும், அதில் ஒரு வகையான மாத்திரைகள் 9ம், மற்றுமொரு வகையான மாத்திரைகள் 11ம் இருந்ததாகவும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து விபரித்த பொலிஸார், மரணமடைந்தவருக்கும் வீட்டின் பணியாளர்களுக்கும் இடையே பரிமாறப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள கடந்த தினத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்த போதிலும், போதிய கால அவகாசம் இன்மையால் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாகவும், அதனால் மீண்டும் சத்தியக்கடதாசிகளைச் சமர்ப்பித்து அதற்கான உத்தரவுகளைப் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நீதவான் பொலிஸாரிடம், “இந்த சாட்சி விசாரணையின் போது மரணமடைந்தவருக்கு பிணை நின்ற இருவர் பற்றிய தகவல்கள் வெளிவந்தன. அவர்களை சாட்சியமளிக்க அழைக்கவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பொலிஸார், “அவர்களிடம் இன்னும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியாமல் போனது” எனத் தெரிவித்தனர்.

மீண்டும் பொலிஸாரை நோக்கி நீதவான், “வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியவில்லை என்பதற்காக சாட்சிகளை அழைக்காமல் இருக்க முடியுமா? அவர்களையே முதலில் சாட்சியமளிக்க அழைக்க வேண்டும். வாக்குமூலங்களைப் பதிவு செய்யாவிட்டால் எவ்வாறு விசாரணை நடத்துவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அச்சமயம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி, “இந்த இரு பிணையாளர்களும் விளக்கமறியலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த நீதவான், “விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது அந்த இரு பிணையாளர்களும் அல்லவே. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றால் வாக்குமூலம் பெறுவது இன்னும் இலகுவானதே. என்னிடம் இருந்து உத்தரவொன்றைப் பெற்று அதனை மிக எளிதாகச் செய்ய முடியும்” என்று கூறினார்.

இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காகப் பல சாட்சிகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அழைத்திருந்தனர்.

அது குறித்து கருத்துத் தெரிவித்த நீதவான், “இன்று சாட்சியமளிப்பதற்காகப் பல பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரினதும் சாட்சியங்களை இன்று பதிவு செய்ய முடியாது. அவசியமற்றவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். சாட்சிகளுக்குள் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளனர். அவர்களைத் தடுத்து வைப்பது பொருத்தமற்றது” எனக் குறிப்பிட்டதுடன், இந்த மரணம் தொடர்பான சாட்சி விசாரணைகள் பின்னர் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.