பௌத்த பீடங்களுக்கு பயந்து நடுங்கும் பொலிஸார்

பொலிஸார் தாங்களும் பௌத்தர்களாக இருப்பதால், பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்பவர்களை தடுத்து சட்ட மீறல்களை செய்ய முனைகின்றனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணையின் போது வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார். விசாரணைக்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் கூறியதாவது:

பொலிஸார் நீதிமன்றில், விகாரை பகுதிக்குள் உள்ள பிரதேச சபை வீதியை மீட்டால் சமாதான சீர்குழைவு ஏற்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் வீதியை சட்டவிரோதமாக கைப்பற்றி வேலி அடைத்து வைத்திருப்பவர் விகாராதிபதியே. அதை மீட்க பிரதேச சபை சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தது.

“இங்கே சமாதான சீர்குழைவை யார் ஏற்படுத்துவார்கள்? நான் தான் சமாதான சீர்குழைவை ஏற்படுத்துவேன் என்பது போல் விகாராதிபதியே முறைப்பாடு செய்துள்ளார்” என்று சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பொலிஸார் சட்ட மீறல்களை மேற்கொள்ள முயல்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

“இது சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலையாகும். பொலிஸாரும் பௌத்தர்களாக இருப்பதால் பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்ட மீறல்களை மேற்கொள்ள முயல்கின்றனர்” என்று கடுமையாக சாடினார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்